Tuesday, June 23, 2009

சாபங்கள் பலிக்கட்டும்.........!

உங்கள் வீட்டுப் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில்
போடட்டும்
என்று சொன்னதற்கே
துள்ளியெழுந்து வந்து
துடித்து வந்து
கேள்வி கேட்கும்
கணவான்களே!
அங்கே எங்கள்
வீட்டுப் பெண்கள்
துகிலுரிக்கப் பட்டு
துறத்தித் துறத்திக்
கற்பு சூறையாடப் பட்டபோது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

எவளுக்கோ நடக்கிறது!
நமக்கென்ன என்றுதானே!
இன்று அந்நிலை
நம் வீட்டுப் பெண்களுக்கும்
வந்திடுமோ
என்ற அச்சம்
உங்களுக்கேன் வந்தது?

பாவத்தில் பங்குபெற்றோர்க்குத்தானே
சாபங்கள் பலிக்கக் கூடும்?
மடியினில் கனமில்லாமல்
மனதினிலேன் பயம் கொண்டீர்?

உள்ளுக்குள் உறைக்கின்றதென்றால்
நம் நாடிழைத்த
கேட்டில் நீரும்
பங்கு பெற்றீரா?
அல்லது
எம்மவர்க்கு நேர்ந்த
கொடுமை கண்டு
கைகொட்டி ரசித்தீரா?

சாபம் கண்டு
உமக்கென்ன பயம் வந்தது?
பாவம் செய்தது உண்மையெனில்
சாபத்தின் பலனை
தின்றுதானே ஆகவேண்டும்!

நரமாமிசம் புசித்தவர்களைக்
காக்கத்தானே
ஐநா சபையினிலும்
ஆதரித்துப் பேசுகின்றீர்!
இரக்கமற்ற இந்தியா
இருந்தாலென்ன
அழிந்தால்தான் என்ன?

அந்நிய நாட்டுப்
பிரச்சினையில்
தலையிடுதல் நடவாதென்று
சொல்லிக் கொண்டுதானே
உளவுக் கருவிகளும்
வக்கணையாய்
ஆயுத உதவிகளும்
செய்து முடித்தீர்!

செத்து மடிந்த
எங்கள் அண்ணன்மாரின்
ஆவிகள்
உங்களைச் சும்மா விட்டுவிடுமா?
கதறியழுதத் தாய்மார்கள்
சார்பில்தானே
தாமரையும்
சாபம் விடுத்தார்!

தவறிழுத்தோர்தானே
அஞ்ச வேண்டும்?
சாப விமோச்சனம்
தேட வேண்டும்?

சாபம் விடுத்தல்
தவறென்று
தடியெடுத்து வந்த
தைரிய சாலிகளே!
உங்கள் துள்ளல்தானே
நிரூபிக்கிறது
பாவத்தில் உங்களுக்கும்
பங்கு உண்டு என்பதனை?

ஏ பாரதமே!
எம்மினத்திற்கெதிராக
நீ தவறிழைத்தது
நிஜமென்றால்
அக்கருஞ்சாபம் பலிக்கட்டும்!
பாரத மாதா
ஒரு
பத்தினி அல்லவென்று
பாரோர் தூற்றட்டும்!

Friday, June 19, 2009

வீர வணக்கங்கள்

வீரர்கள்
வீழ்த்தப்படுவதில்லை!
விதைக்கப் படுகின்றனர்!

விதைகள்
விருட்சங்களாகும்
விரைவில்!

நாங்கள்
பிறந்த இடம்
தவறாகிவிட்டது!
இல்லையெனில்
உன்னுடனேயே
இருந்திருப்போம்
சமர் களத்தில்!

இது இரங்கற்பா
ஆகிவிடாது!
நீ என்றென்றும்
இருக்கிறாய்
எங்கள் மனதில்!
எங்கள் உறுதியில்!
எங்கள் மனோதிடத்தில்!
நம்புகிறோம் இன்னும்!
உம் விடியல்
பிறக்கும்
விரைவில்!