Wednesday, January 25, 2006

என் தேசம் போல் வருமா?


எத்தேசம் சென்றிடினும்
எந்தேசம் போல் வருமா?

மண்ணில் மணக்கும்
எங்கள் பாரம்பரியம்..!
மனதை மயக்கும்
எங்கள் கலாச்சாரம்..!
மனதை உய்க்கும்
எங்கள் வரலாறு..!

சாதிகள் பலவுண்டு..!
மொழிகள் பலவுண்டு..!
மதங்கள் பலவுண்டு..!
முகங்கள் பலவுண்டு..!

எல்லோரும் ஒன்றென்றே
சொல்லிடும் என் தேசம்..!

அச்சுறுத்தல் பலவரினும்
இன்னல்கள் எவர்தரினும்
எந்தேசத்துப் பிள்ளைகாளாய்
எல்லோரும் சொந்த்தமென
சேர்ந்திருந்து எதிர்கொள்வோம்..!
எவர்வரினும் அச்சமில்லை..!

வந்தே மாதரம்..!
வந்தே மாதரம்..!
வந்தே மாதரம்..!

நாமக்கல் கவிஞர் திரு இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு என் அர்ப்பணம்

Monday, January 16, 2006

பிரிவுரை படலம்..!

கல்லூரி நாட்கல் முடியப்போகும் தருவாயில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆட்டோகிராப்ஃகளை பரிமாறிக்கொண்டபோது, என்னுள் தோன்றியது இத்தககய பிரிவுரை படலம்..!
உடலுக்கு உயிர் எழுதும் ஆட்டோகிரப்ஃ

நீ வேறு நான் வேறா?
பின் ஏன் இந்த பிரிவுரை படலம்?

இல்லை இல்லை !
நீ வேறு நான் வேறு
என்றுதானே
இப்பிரபஞ்சம் சொல்கிறது.

ஆம்! உன்மை என்றுதான்
தோன்றுகிறது!

இன்றோ நாளையோ,
நாளை மறு நாளோ,
சில ஆண்டுகள் கழித்தோ,
பல ஆண்டுகள் கழித்தோ
நாம் பிரியத்தானே போகிறோம்!

"இவ்வுலகில் நாம் உதிர்க்கப்பட்டபோது
இப்பிரபஞ்சத்தில் பிறக்கும்போது
ஒன்றாய்த்தானே பிறந்தோம்!
பின் ஏன் நாம்பிரிவதாம்?"
என்ற உன் கூக்குரல்
எனக்கு புரிகிறது!

என்ன செய்வது?
என் கடமை முடிந்ததென்று
காலன் என்னை
அழைக்கும்போது
நான் சென்றுதானே ஆகவேண்டும்.

நான் செல்ல மறுத்து
அடம்பிடித்தால்
காலனால் தரப்படும்
வலியும், ரணமும், வேதனையும்
உன்னையல்லவா வதைக்கும்!
அதனால் நாம் பிரியத்தான் வேண்டும்!

பிரிந்த பின்னர் என்ன செய்வோம்?
நான் காற்றோடு காற்றாக பேயாய்!
நீ மண்ணோடு மண்ணாக பிணாமாய்! - ஆக
ஐம்பூதங்களுள்
ஆளுக்கொன்றாய் நாம்!
அதுதான் நிஜம்..!

Thursday, January 05, 2006

என் தமிழுக்கு அர்ப்பணம்...!



தாளொன்று எடுத்து
தமிழில் ஓர் சொல்
எழுதும்போதெல்லாம்தான்
உயிரோடும், உணர்வோடும்
இருப்பதாய் உணர்கிறேன் நான்.

என் தாய் தந்த
தமிழே ! - என் ஊனின்
தணியாத தழலே

நானே உனக்கு
அர்ப்பணம்..!
என் கவிதைகள்
என்ன விதிவிலக்கா..?

வண்ணங்களின் சொந்தக்காரி!


வானவில்லுக்கு வண்ணம் சேர்க்க
வருவானோ இறைவன்
உன்னிடத்தில்
இரவல் கேட்க..!

Tuesday, January 03, 2006

இதழ் மேல் பதித்த முத்தம்.


இதழ் மேல் பதித்த முத்தம்.
இணைந்த இதயங்களின் சத்தம்
இது தேவை எனக்கு நித்தம்
காதலால் எனக்குள் யுத்தம்.