Sunday, February 26, 2006

13 : காதலெனும் பாதையில்...!

காதலெனும் பாதையில்
கவனமின்றி திரிந்ததால்
நடுவில் மாட்டிக்கொண்டு
நானும் விழிக்கிறேன்!

நான்கு மனைவிமார்கள்!

(அனுபவம்/நிகழ்வுகள் அல்ல! நகைச்சுவை/நையாண்டி)

12 : வெறுமையை நோக்கி



ஒவ்வொரு நாளும்
வெறுமையை நோக்கியே
என் பயணம்!
என்று முடியும்
என காத்திருக்கிறேன்!
நீ
வரும்
வரை!

Tuesday, February 14, 2006

11 : காணி நிலம் கேட்டாயே!




காணி நிலம்
வேண்டுமென்று
கேட்டாயே பாரதி!
கிரயப் பத்திரத்தை
ஏன்
கேட்க மறந்தாய்?

அங்கே பார்!
நீ
கேட்டுப் பெற்ற
காணி நிலமும்
ஆக்ரமிப்புகளால்
அழிந்து கொண்டிருக்கிறது!

வரைபடத்திலிருந்து கூட!

Sunday, February 05, 2006

உன்னைத்தான் கேட்கிறேன் - பாரதீ

மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்று கூறிய பாரதீயே
உன்னைத்தான் கேட்கிறேன்..!

இங்கு மாதரையே
கொளுத்துகின்ற
கொடுமையை
என்ன செய்வாய்?