Friday, December 01, 2006

நிம்மதியாய் வாழ...!


சமாதானப்
புறாக்கள்
இப்போதுதான்
சளைக்காமல்
பறக்க வேண்டும்..!

இறக்கை
ஓய்ந்ததென்று
அவை
இளைப்பாற
அமர்ந்துவிட்டால்
மனித நேயங்கள்
இங்கு
மரிக்கத் துவங்கி விடும்.

கண்ணீர் விட்டுக்
கண்ணீர் விட்டே
தண்ணீர் தேசமாகிப்
போனது
எங்கள் பூமி...!

நாங்கள்
நிம்மதியாய்
உறங்க முடிவது
மயானத்தில்
மட்டும்தானா?


மீண்டுமொருமுறை
வேண்டாம் - இங்கு
வேட்டுச் சத்தங்கள்..!

நிசப்தங்களுடனேயே
நாங்கள்
நிம்மதியாய்
இருந்துவிட்டுப்
போகிறோம்...!

(இது ஒரு மீள் பதிவு - ஜனவரி 21 2006 ல் பதிவிடப்பட்டது)