Friday, January 19, 2007

24 : வாங்கி வந்த சாபம்!

கருவின் உள்ளிருந்தே
நான் கத்தியிருப்பேன்
என்று தோன்றவில்லையா?

உனக்குள்ளேதானே
இருந்து வந்தேன்!
என் வலியை நீ
உணர வில்லையா?

பெற்றெடுத்துப் போட்டிருந்தால்
ஒரு நாளேனும்
நீயும் என் உயிர்தானடி
என்று உச்சிமுகர்ந்து
கொஞ்சியிருப்பாயோ!

பெரிய மனுஷியானதும்
கன்னங்களில் சந்தனம்பூசி
நெட்டிமுறித்துப்
போட்டிருப்பாயோ!

மாமியார் வீடு செல்கையில்
என் முகம் சாய்த்து
அழுவதற்கு உன்
தோள்கள் தந்திருப்பாயோ!

சந்தோஷமாக இருக்கிறாயா?
எத்தனை மாசமென்று
என் கணவரும் அறியாமல்
என்னைக் கேட்டிருப்பாயோ!

அம்மா! உன்
வயிற்றிலிருந்து நான்
உயிரோடு வரக்கூடாதென்று
சாபம் வாங்கி வந்தேனோ?

கருவறையே
கல்லறையாகும்!
அல்லது
குப்பைத்தொட்டியே
சேலைத்தொட்டிலாகும்!

பெண்ணாக உருவாகும்
எங்களுக்கு
மட்டும் ஏன் இப்படி?

உந்தியது : ஏன்? - வெட்டிப் பயல்