ஒரு மழைக்கால
இரவுப் பொழுது
மறக்காத உன்
நினைவுகள்
விழித்திரையில்
ஈரம் உலர
இன்னும் சிறிது
நேரமாகலாம்!
கொதித்திருந்த
உள்ளத்தில்
இப்போது
அமைதியான
ஜதிகளாய்
உன்
கெஞ்சிய வார்த்தைகள்!
முகம் பார்த்து
நீ
கேட்டாய்!
உன்னை மறந்துவிடுமாறு!
என் உயிர்
பார்த்துக்
கேட்கத்
துணிவிருந்ததா உனக்கு?
கொட்டும் கண்ணீருடன்
தலை குனிந்து
திரும்பிச் சென்றாய்!
என்றேனும் ஒருநாள்
என்னை நீ
நினைவு கூறக்கூடும்!
அதற்காகவேனும்
எடுத்துக் கொள்
என் நினைவுகளை
எங்கேனும் உன்
இதயத்தில் ஒரு
மூலையில்!