பெரு மழை நின்றுவிட்ட
அமைதியானதொரு
மாலைப் பொழுதில்
விடாது வீசும்
சில்லென்ற காற்றும்
உன் கேசம்
கலைத்த பொழுதுகளை
நினைவு படுத்தி விடுகிறது!
உறங்கங்கள் தொலைத்த
இரவுப் பொழுதுகளின்
நிசப்தம்
கவிதைகளின்
முயற்சிகளில்
கசங்கிய காகிதங்களாய்
மனதின் வலி
மீண்டு மீண்டும்
உன்னையே நினைவூட்டுகிறதே!
காரணமேயின்றி
கணப் பொழுதில்
"என்னை மறந்துவிடென்று"
நீ கூறிச் சென்ற
அந்த சாலையின் முடிவு
மீண்டும் மீண்டும்
கடந்து செல்லும்போதெல்லாம்
நின்று திரும்பிப்
பார்க்கச் செய்கிறது!
ஒருவேளை
நீ திரும்பவந்து
எனக்கெனக்
காத்திருப்பாயோ என்று?