வாழ்க்கை
கொஞ்சங் கொஞ்சமாய்
நகரத்தான் வேண்டும்!
நேற்றைய வாழ்வு
இன்றைய அசை!
இன்றைய வாழ்வு
நாளைய அசை!
தினம் தினமும்
மாற்றங்கள்
நம்முள்ளே
நிகழத்தான் வேண்டும்!
பழையன கழிந்தால்தானே
புதியன புகுவதற்கு!
குழந்தைப் பருவத்து
கும்மாளங்களும்
அடலசென்ட் பிராயத்து
அநியாய சேட்டைகளும்
மீசையோடு சேர்ந்து
மனதில் முளைத்த
கள்ளத் தனங்களும்
படிப்பை முடித்துவிட்டு
பணி தேடும் காலங்களில்
காணாமல்தான் போயிருக்கும்!
போகட்டுமே!
மனதில்
அசை போட்டபடியே
நிகழ் காலம்
அனுபவிப்போம்!
வாழ்க்கை
கொஞ்சங் கொஞ்சமாய்
நகரத்தான் வேண்டும்!