வாழ்க்கை
கொஞ்சங் கொஞ்சமாய்
நகரத்தான் வேண்டும்!
நேற்றைய வாழ்வு
இன்றைய அசை!
இன்றைய வாழ்வு
நாளைய அசை!
தினம் தினமும்
மாற்றங்கள்
நம்முள்ளே
நிகழத்தான் வேண்டும்!
பழையன கழிந்தால்தானே
புதியன புகுவதற்கு!
குழந்தைப் பருவத்து
கும்மாளங்களும்
அடலசென்ட் பிராயத்து
அநியாய சேட்டைகளும்
மீசையோடு சேர்ந்து
மனதில் முளைத்த
கள்ளத் தனங்களும்
படிப்பை முடித்துவிட்டு
பணி தேடும் காலங்களில்
காணாமல்தான் போயிருக்கும்!
போகட்டுமே!
மனதில்
அசை போட்டபடியே
நிகழ் காலம்
அனுபவிப்போம்!
வாழ்க்கை
கொஞ்சங் கொஞ்சமாய்
நகரத்தான் வேண்டும்!
உள்ளுக்குள்ளே இவ்வளவு வைத்துக்கொண்டு,
ReplyDeleteசும்மாவேனும்,
கலாய்ப்பிலேயே காலம் தள்ள நினைக்கும்
உங்களைப் பார்த்தால்[!!!]
பொறாமையாய் இருக்கிறது!!!
/படிப்பை முடித்துவிட்டு
ReplyDeleteபணி தேடும் காலங்களில்
காணாமல்தான் போயிருக்கும்!//
உங்களுக்குள் இப்படியொரு சிபியா? அன்னியன் போல! நெஞ்சாங்கூட்டா.... அட வுடுங்கப்பா, பாருங்க சிபி நான் சொல்ல வரதே முழுசாவே சொல்ல விடமாட்டேங்கிறாங்க... ஹீம்...ஹூம் (அழுது கொண்டே... ஊரணிக் கரையில் தெகா ;-)
சிபியண்ணே, ராத்திரி நீங்க தூங்க மாட்டீங்களா? காலையில மூணு மணிக்குப் பதிவு போடுரீங்க :)
ReplyDeleteசரி தான் :)
ReplyDeleteவாழ்க்கை நகரத்தான் வேண்டும்//
ReplyDeleteநல்லதொரு கருத்து சிபி.
தேங்கினதால் பயன் பெற்றவர் யாருமே இல்லை. கொசுக்களைத்தவிர:-))
திரு எஸ்.கே பதிவிலிருந்து உங்கள் கவிதைக்கு வந்தேன்.வாழ்த்துக்கள்.
//மீசையோடு சேர்ந்து
ReplyDeleteமனதில் முளைத்த
கள்ளத் தனங்களும்//
எனக்கு பிடித்த வரிகள் இது
// ராபின் ஹூட் said...
ReplyDeleteசிபியண்ணே, ராத்திரி நீங்க தூங்க மாட்டீங்களா? காலையில மூணு மணிக்குப் பதிவு போடுரீங்க :) //
ராபின்ஹூடு, சிபி தூங்கனும்னு தேவையேயில்லை. அமுதம் குடிச்சவங்களுக்குத் தூங்கனும்னு தேவையே இல்லையாம். இவரு என்ன அமுதம் குடிச்சாருன்னு தெரியலையே.
காலையில் படிக்க கிடைத்த ஒரு அருமையானப் பதிவு. வாழ்க வளமுடன்.
ReplyDeleteபடித்தேன்.. ரசித்தேன்..:-)
ReplyDelete//உள்ளுக்குள்ளே இவ்வளவு வைத்துக்கொண்டு,
ReplyDeleteசும்மாவேனும்,
//
வாங்க எஸ்.கே! எவ்வளவுங்க?
//கலாய்ப்பிலேயே காலம் தள்ள நினைக்கும்//
அட! முடிவே பண்ணிட்டீங்களா! இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்!
(இதுக்கப்புறம் உங்களுக்கெல்லாம் பழகிடும். ஹி..ஹி..)
//உங்களைப் பார்த்தால்[!!!]
பொறாமையாய் இருக்கிறது!!! //
எப்ப பார்த்தீங்க?
பொறாமை எதற்கு? ஒனிடா டிவி விளம்பரம் ஏன் என் நினைவுக்கு வருது?
//சிபியண்ணே, ராத்திரி நீங்க தூங்க மாட்டீங்களா? காலையில மூணு மணிக்குப் பதிவு போடுரீங்க//
ReplyDeleteஇந்நேரத்துக்கு கலாய்ச்சி என்னை ஒருத்தர் இப்படி சீரியஸா எழுத வெச்சிட்டார்.
மேல பாருங்அ கையில வேலோட சிரிச்சிகிட்டிருக்கார்.
//சரி தான் :) //
ReplyDelete????????????
//வாழ்த்துக்கள். //
ReplyDeleteநன்றி மனசு! மனசார வாழ்த்தியிருக்கீங்க! மிகவும் நன்றி!
//எனக்கு பிடித்த வரிகள் இது //
ReplyDeleteகண்ணன்!
//மீசையோடு சேர்ந்து
மனதில் முளைத்த
கள்ளத் தனங்களும்//
உள்ளதைத்தான சொல்றோம்!
இப்ப இல்லைங்கோவ்.........
//இவரு என்ன அமுதம் குடிச்சாருன்னு தெரியலையே.//
ReplyDeleteஅமுதம் குடிச்சிட்டா அலம்பல் பண்ணாம சமர்த்தா தூங்குற ஆளு நானு! ஓவரா போனாத்தான் பிறர் தூக்கமும் கெடும்! பிறர் துக்கமும் என் துக்கமாகும்!
//காலையில் படிக்க கிடைத்த ஒரு அருமையானப் பதிவு. வாழ்க வளமுடன்.//
ReplyDeleteரொம்ப நன்றி தேவ்!
வளர் சிதை மாற்றம் இங்க பாத்தீங்க!
வளர் சதை மாற்றத்தையும் வந்து பாருங்க!
:))
//படித்தேன்.. ரசித்தேன்//
ReplyDeleteமிக்க நன்றி மனதின் ஓசை!
//உங்களுக்குள் இப்படியொரு சிபியா?//
ReplyDeleteஇந்தப் பக்கம் இப்பத்தான் வர்றீங்கன்னு நினைக்கிறேன் தெகா!
//அன்னியன் போல!//
ஏங்க! வம்புல மாட்டி விடுறீங்க?
//நெஞ்சாங்கூட்டா.... அட வுடுங்கப்பா, பாருங்க சிபி நான் சொல்ல வரதே முழுசாவே சொல்ல விடமாட்டேங்கிறாங்க... ஹீம்...ஹூம்//
ம்ம். கமான் அப்படித்தான் சொல்லுங்க!
அட! சே! அவரை சொல்லத்தான் விடுங்களேம்பா!
(பாவம்,, ஏதோ பேய் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன், வேப்பிலை அடிச்சா சரியாப் போயிடும்)
//மனதில்
ReplyDeleteஅசை போட்டபடியே
நிகழ் காலம்
அனுபவிப்போம்!//
இது.
பின்னே எப்படி ப்ளொக் எழுதறதாம்?:-)))))
எல்லா மனசுக்குள்ளிலும் இப்படிப் பலவிஷயங்கள் முடங்கிக் கிடக்குதுல்லே
நீங்க போட்டியில கலந்துக்காமல் சும்மா ஜோக்கடித்துக்கொண்டு இருக்கிங்க என்று நினைத்தால் இங்க கவிதையில் பூத்து விளையாடுறிங்க ....
ReplyDeleteஎனிவே வாழ்த்துக்கள்
தலைப்பிற்கேற்ற கவிதை.
ReplyDelete\\நேற்றைய வாழ்வு
இன்றைய அசை!
இன்றைய வாழ்வு
நாளைய அசை!\\
என்றும் நினைவில் நிற்கும் இந்த வரிகள்.
வாழ்த்துக்கள்
அன்பு தம்பி
நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..
ReplyDeleteஉங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....
நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..
ReplyDeleteஉங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....
எனக்குக் கொடுமையா போகுது வாழ்க்கை.. இதுல நான் என்ன கவிதை பாடுறது? சரி.. கவிஞர் நீர்.. கவிதை கொட்டுது.. ஏதோ கொஞ்சம் மனசு ஆறி அடுத்த வேலையைப் பார்க்கலாம்.. பாருங்க..
ReplyDelete