என் வீட்டு வாசலில் நின்று
மெல்ல எட்டிப் பார்க்கிறது!
மரப்பாச்சி பொம்மையுடன்
விளையாடிக் கொண்டிருந்தேன்!
சென்று வா! பிறகு பார்க்கலாம்!
என்றேன்!
இப்போது வரலாமா?
குரல் கேட்டுத் திரும்பினேன்!
இப்போதுதான் மீசை அரும்புகிறது!
இன்னொரு நாள் வா பார்க்கலாம்!
என்றேன்!
"இன்று வசதி எப்படி?" என்று
என்னைப் பார்த்து கண் சிமிட்டியது!
அடடா!
இப்போதுதானே
காதலிக்க தொடங்கியுள்ளேன்!
ஆகாது! ஐயா! ஆகாது!
என்றேன்!
வேலை தேடி வேலை தேடி
அலுத்துப் போய் அழைக்கிறேன்!
"இன்னும் நீ வாழ வேண்டியுள்ளது!"
அப்புறம் பார்க்கலாம்!
என்றது!
கண்ணெதிரே காதலிக்கு
கல்யாணம் ஆகிறது!
தேடிப் பார்க்கிறேன்!
"தேடாதே! இன்னும்
நேரன் இருகிறது'
என்கிறது.
குடும்பச் சுமை தாங்கியே
முதுகில் கூன் விழுந்த நிலையில்
கேட்டுப் பார்க்கிறேன்!
"இல்லை! இல்லை!
இன்னும் கொஞ்சம்
வாழ வேண்டும் நீ"
என்றது!
சொந்தங்கள்
யாரென்று தெரிந்தாயிற்று!
நல்லது கெட்டது அறிந்தாயிற்று!
உலகம் இப்போது புரிந்தாயிற்று!
அல்லல்களும் அவமானங்களும்
இலேசாயின!
இப்போது நான்
வாழ நினைக்கிறேன்!
"என்ன கற்றுக் கொண்டாய்?
இதுவரை? " - என்றது.
மரணம்
"நான் முடிவு செய்வதல்ல"
என்றேன்.
"வாழ்க்கையைக் கற்றுக்
கொண்டாய்!
வந்த வேலை முடிந்தது!
புறப்படு"
என்றது!
சூப்பர்.. போட்டிக்கு முதல் பதிவா?!!! கலக்கிட்டீங்க தளபதி
ReplyDelete//சூப்பர்.. போட்டிக்கு முதல் பதிவா?!!! //
ReplyDeleteமுதலிடம்ல!
//கலக்கிட்டீங்க தளபதி //
ரொம்ப நன்றி!
கலக்கல் தலைவா!
ReplyDelete//"என்ன கற்றுக் கொண்டாய்?
இதுவரை? " - என்றது.
மரணம்
"நான் முடிவு செய்வதல்ல"
என்றேன்//
. அல்லது " இடம் மாறி இருக்கிறது என நினைக்கிறேன்(...என்றது.மரணம்
"நான்...).
சிபி...மரணத்துக்கு மொதல்ல மணிகட்டுனது நீங்க தானா ?
ReplyDelete//
"வாழ்க்கையைக் கற்றுக்
கொண்டாய்!
வந்த வேலை முடிந்தது!
//
கத்துக்கிட்டத அனுபவிக்க விடமாட்டகிறாங்கப்பா !
//அல்லது " இடம் மாறி இருக்கிறது என நினைக்கிறேன்(...என்றது.மரணம்
ReplyDelete"நான்...).
//
வாங்க கப்பி பயலாரே!
உண்மைதான்.
"என்ன கற்றுக் கொண்டாய்?
இதுவரை? " - என்றது.
"மரணம்
நான் முடிவு செய்வதல்ல"
என்றேன்.
இப்படித்தான் இருக்க வேண்டும். இருப்பினும் பதிவில் மாற்ற முடியாது.
தேன் கூட்டின் போட்டி விதிமுறைகள் உள்ளது.
//...மரணத்துக்கு மொதல்ல மணிகட்டுனது நீங்க தானா //
ReplyDeleteபின்னே!
//கத்துக்கிட்டத அனுபவிக்க விடமாட்டகிறாங்கப்பா !
//
உண்மைதான் கோவியாரே!
:)
//"தேடாதே! இன்னும்
ReplyDeleteநேரன் இருகிறது'
என்கிறது.//
இவ்வரிகளையும்
"தேடாதே! இன்னும்
நேரம் இருகிறது"
என்கிறது.
என்று திருத்தி வாசிக்கவும்.
பெரிய தத்துவத்தை அழகான வரிகளில் வடித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்!
எளிமையாக அழகாக இருக்கிறது, சிபி
ReplyDeleteசிபி என்ன இது.......
ReplyDeleteஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ ரேஞ்க்கு.....
கொஞ்சம் கீழ வாங்கப்பா..
தலைப்பு எப்ப கொடுப்பாங்கன்னு காத்திட்ருந்திங்களா?
முதல் போட்டி கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete//பெரிய தத்துவத்தை அழகான வரிகளில் வடித்திருக்கிறீர்கள்//
ReplyDeleteநன்றி எஸ்.கே!
விரைவில் தங்களுடைய படைப்பையும் எதிர்பார்க்கிறோம்!
:)
//எளிமையாக அழகாக இருக்கிறது, சிபி //
ReplyDeleteமிக்க நன்றி மிஸ்!
//ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ ரேஞ்க்கு.....
ReplyDeleteகொஞ்சம் கீழ வாங்கப்பா..
//
வாங்க மனசு! ஆமா ! இதல்லாம் யாருங்க? ஓஷோ தெரியும்! ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தி யாருங்க?
//தலைப்பு எப்ப கொடுப்பாங்கன்னு காத்திட்ருந்திங்களா?
ReplyDelete//
பின்ன முதல் ஆளாய் வருவது எப்படியாம்?
//முதல் போட்டி கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்//
ReplyDeleteமிக்க நன்றி அனுசூயா!
தங்களிடமிருந்தும் போட்டிக்கான படைப்பை எதிர்பார்க்கிறேன்.
காமெடியாகவும், சீரியஸாகவும்.
:)
அது சரி! பொன்ஸ்! உங்க படைப்பு எப்போ?
ReplyDeleteசங்கத்து ஆளுங்க எல்லாரும் முதல் வரிசையில இருக்க வேணாமா?
//யாரென்று தெரிந்தாயிற்று!
ReplyDeleteநல்லது கெட்டது அறிந்தாயிற்று//
சிபியாரே.. அதெல்லாம் சரி நீங்க நல்லவரா ? கெட்டவரா ? :)
//சிபியாரே.. அதெல்லாம் சரி நீங்க நல்லவரா ? கெட்டவரா ? :) //
ReplyDeleteகோவியாரே! இந்த வாரம் தங்களைப் பொறுத்த வரை கோவையார் கெட்டவர்.
:))
//கோவியாரே! இந்த வாரம் தங்களைப் பொறுத்த வரை கோவையார் கெட்டவர். //
ReplyDeleteஅத நான் தான் ஞ்சொல்லனும் அப்பு :)
//கோவியாரே! இந்த வாரம் தங்களைப் பொறுத்த வரை கோவையார் கெட்டவர். //
ReplyDeleteதெரியாம கேக்குறேன் கோவையார் யாருங்கோ ? குமரனா ? அவுரு மதுரகாரப்புள்ள இல்ல ? :)
"கேட்கும் போது கிடைத்து விட்டால் அப்புறம், மரணத்துக்கு என்ன மரியாதை இருக்கு போகுது."
ReplyDeleteநல்லா இருக்கு தளபதியாரே! ஆனால் ஒரு சில வார்த்தைகளை எப்போழுதோ, எங்கோ படித்த மாதிரி நிணைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
சுறுசுறுப்பா முதல்லே நல்ல பதிவைப்போட்டு அசத்திட்டீங்க சிபி.
ReplyDeleteமரணத்தைப்பற்றீ ஒரு சிறு அரபுக்கதை ஜெஃப்ரி ஆர்ச்சரின் To Cut a Long Story Short தொகுப்பில் உள்ளது. உங்களுடையதுடன் சம்மந்தம் இல்லாவிட்டாலும் ஏனோ அந்தக்கதை நினைவுக்கு வந்தது..
வரேன்.. நானும் ஒரு கதையோட!
//அத நான் தான் ஞ்சொல்லனும் அப்பு :) //
ReplyDeleteகோவியாரே! கேள்வியும் நீரே பதிலும் நீரே வா?
//தெரியாம கேக்குறேன் கோவையார் யாருங்கோ ? குமரனா ? அவுரு மதுரகாரப்புள்ள இல்ல ? :)
ReplyDelete//
குமரன் மதுரைக்காரர்தான்! ஆனால் கோவைக் காரர் அல்ல! கோவையார் என்பர் நாமக்கல்லார்தான். ஆனால் அவர் கோவைக்காரர் அல்ல! ஆனால் அவரும் கோவைக் காரரே! நாமக்கல்லார் என்றழைக்கப் படும் சிபியாரையும் தாங்கள் கோவைக் காரர் என்று எண்ணக் கூடும். ஆனால் அவர் கோவைக் காரர்தான்.
//நல்லா இருக்கு தளபதியாரே! //
ReplyDeleteநன்றி நாகையாரே!
//ஆனால் ஒரு சில வார்த்தைகளை எப்போழுதோ, எங்கோ படித்த மாதிரி நிணைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. //
இருக்கலாம்! மரணம் என்பது ஒருவருக்கொருவர் மாறுபட்டது அல்லவே!
(நல்லா சமாளிச்சேனா?)
//சுறுசுறுப்பா முதல்லே நல்ல பதிவைப்போட்டு அசத்திட்டீங்க சிபி.
ReplyDelete//
நன்றி பினாத்தலாரே!
//வரேன்.. நானும் ஒரு கதையோட//
பினாத்தலார் படைப்பு இல்லாம போட்டியா?
//(நல்லா சமாளிச்சேனா?) //
ReplyDeleteஏதோ சுமாரா.....
//குமரன் மதுரைக்காரர்தான்! ஆனால் கோவைக் காரர் அல்ல! கோவையார் என்பர் நாமக்கல்லார்தான். ஆனால் அவர் கோவைக்காரர் அல்ல! ஆனால் அவரும் கோவைக் காரரே! நாமக்கல்லார் என்றழைக்கப் படும் சிபியாரையும் தாங்கள் கோவைக் காரர் என்று எண்ணக் கூடும். ஆனால் அவர் கோவைக் காரர்தான்//
ReplyDeleteசன் டிவியில் அரட்டை அரங்கம் நடத்த ஆள் தேவைபடுறாங்களாம் கொஞ்சம் போய்டு வாங்களேன் :)
Please accept my belated congrads.
ReplyDeleteSorry for English. I am out of town.
Good caption. Many deaths will be given birth now. Good contrast for the contest.
//Good caption. Many deaths will be given birth now. Good contrast for the contest.
ReplyDelete//
மிக்க நன்றி ஓகையாரே!
தாமதமெல்லாம் ஒன்றும் இல்லை. இன்று மாலைதான் இவ்விடுகையை இட்டேன்.
//தாமதமெல்லாம் ஒன்றும் இல்லை. இன்று மாலைதான் இவ்விடுகையை இட்டேன்.//
ReplyDeleteஎள்ளூன்னா எண்ணையா நிக்கனும் யாரவது சொல்லட்டம் ... போட்டின்னா நாமக்கல்லாரா நில்லங்கப்பூன்னு சொல்லிபுடுறேன் :)
சிபியாரே,
ReplyDeleteநல்லா வந்திருக்கு. பாட்ஷா "எனக்கு இன்னொரு பேரும் இருக்கு"ங்கற மாதிரி திடீர்னு சீரியஸா ஒரு பதிவு எழுதிட்டீங்க :)
// நேரன் இருகிறது //
தட்டச்சுப் பிழைகளை திருத்தலாம் என நினைக்கிறேன்! எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுட்டு சரி செஞ்சுடுங்க...
//எள்ளூன்னா எண்ணையா நிக்கனும் யாரவது சொல்லட்டம் ... போட்டின்னா நாமக்கல்லாரா நில்லங்கப்பூன்னு சொல்லிபுடுறேன் :)
ReplyDelete//
அது சரி!
எள் எண்ணெய் மேட்டர்னா பார்த்திபனே வந்துவாரே!
//நல்லா வந்திருக்கு. பாட்ஷா "எனக்கு இன்னொரு பேரும் இருக்கு"ங்கற மாதிரி திடீர்னு சீரியஸா ஒரு பதிவு எழுதிட்டீங்க :)
ReplyDelete//
மிக்க நன்றி இளவஞ்சி!
:))
//தட்டச்சுப் பிழைகளை திருத்தலாம் என நினைக்கிறேன்! எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுட்டு சரி செஞ்சுடுங்க... //
கேட்டுட்டு பண்ணுறதுதான் சரி!
இளவஞ்சி,
ReplyDeleteநீங்க சிபியைப் பத்தி சரியாப் புரிஞ்சிக்கலை.. இந்த "மனமும் நினைவும்" வலைப்பூ பூராவுமே இவரோட சீரியஸான கவிதைகள் தான்..
கொஞ்சம் சீரியஸான ஆசாமி தான்.. என்ன, அப்பப்போ அந்த சீரியஸ் காரெக்டரைத் தூங்க விட்டுடுவாரு..
நீங்க சொன்ன தன்னடக்கம் பூரா பூரா எங்க தளபதிக்கே.. :)
பொன்ஸ்,
ReplyDeleteஇளவஞ்சி எனக்கு பிரைமரி ஸ்கூல்ல சீனியர்.
//கொஞ்சம் சீரியஸான ஆசாமி தான்.. //
எதை வெச்சி சொல்றீங்கன்னு தெரியுது பொன்ஸ்! மிக்க நன்றி!
//அது சரி!
ReplyDeleteஎள் எண்ணெய் மேட்டர்னா பார்த்திபனே வந்துவாரே! //
எள்ளு மேட்டருக்கு பார்திபன் வரலாம் .. ஆன இது போட்டி - நாமக்கல்லார் மேட்டராச்சே கைப்பு இல்ல வரனும்
//
ReplyDeleteஎதை வெச்சி சொல்றீங்கன்னு தெரியுது பொன்ஸ்! மிக்க நன்றி!
//
சிரிப்பான் இல்லாம சொன்னதைப் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு... :)
//சிரிப்பான் இல்லாம சொன்னதைப் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு... :) //
ReplyDeleteஅதுக்குள்ள டென்சன் ஆகி ஒரு சிரிப்பான போட்டு நல்லா சமாளிக்கிறிரே :)
மரணம் கூட வாசித்தபின்தான் சுவாசிப்பை நிறுத்தும்! நல்ல கவிதை.
ReplyDeleteவேலைப் பழு காரணமாக இத்தனைநாள் பார்க்கவில்லை. எத்தனை நாளாக நடக்கிறது இந்த போட்டிகள்?? நிறைய விட்டுப்போச்சா? (படிக்க?)
சிபி..அழகாக ஆழமாக இருக்கிறது...லேசாக ஆரம்பித்து நச்சென்று முடித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தள! கலக்கரீங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு சிபி. ரொம்பத் தாமதிக்காம இந்தக் கவிதையையாவது இப்பவே படிச்சிட்டேனே. யாருக்குத் தெரியும் எது எங்கே தயங்கிப் பதுங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது என்று. இல்லையா? :-)
ReplyDeleteசிபி,
ReplyDeleteஅருமை. கலக்கிடீங்க...
//மரணம் கூட வாசித்தபின்தான் சுவாசிப்பை நிறுத்தும்!//
ReplyDeleteநம்ம கவிதையையா சந்திரசேகரன்!
இது கூட நல்லா இருக்கே!
//வேலைப் பழு காரணமாக இத்தனைநாள் பார்க்கவில்லை.//
என்ன? தங்கள் வேலையில் பழுவா?
ஐயஹோ! என்ன கொடுமை இது!
//எத்தனை நாளாக நடக்கிறது இந்த போட்டிகள்?? நிறைய விட்டுப்போச்சா? (படிக்க?)
//
இப்போதுதான் இரண்டு மூன்று மாதங்களாக! நான் கூட கடந்த போட்டியில் இருந்துதான் கலந்து கொள்கிறேன். நீங்கள்ளும் கலந்து கொண்டு கலக்குவீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மனதின் ஓசை!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்மனம்!
ReplyDelete//யாருக்குத் தெரியும் எது எங்கே தயங்கிப் பதுங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது என்று. இல்லையா?//
ReplyDelete:)
தமிழே இப்படி எண்ணலாமா?'
நன்றி குமரன்.
நன்றி சிவபாலன். வருகைக்கும் வாழ்த்துக்கும்.
ReplyDelete//நாமக்கல்லார் மேட்டராச்சே கைப்பு இல்ல வரனும் //
ReplyDeleteநிச்சயம் வருவார் கோவியாரே! காத்திருங்கள்!
//சிரிப்பான் இல்லாம சொன்னதைப் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு//
ReplyDeleteபின்ன சீரியஸான ஆளாச்சே நான்.
:-X
//அதுக்குள்ள டென்சன் ஆகி ஒரு சிரிப்பான போட்டு நல்லா சமாளிக்கிறிரே //
ReplyDeleteஅதையும் கண்டு பிடிச்சிட்டீங்களா! இதெல்லாம் வெளியில சொல்லக் கூடாதப்பூ!
நல்லா இருக்குங்கோ!!! போட்டிக்கு வாழ்த்துக்களுங்கோ!!!!
ReplyDeleteசிபி,
ReplyDeleteபோட்டிக்குனு தான் எழுதி இருக்கீங்க இல்லையா? நல்லாவே வந்திருக்கு. கட்டாயம் பரிசு கிடைக்கும். இது மாதிரிக் குமார காவியத்தையும் முடிஞ்சால் கவனிக்கவும், முடிஞ்சால் தொடரவும். ஒரு வேண்டுகோள்தான்.
சிபி,
ReplyDeleteபோட்டிக்குனு தான் எழுதி இருக்கீங்க இல்லையா? நல்லாவே வந்திருக்கு. கட்டாயம் பரிசு கிடைக்கும். இது மாதிரிக் குமார காவியத்தையும் முடிஞ்சால் கவனிக்கவும், முடிஞ்சால் தொடரவும். ஒரு வேண்டுகோள்தான்.
தளபதி டக்கராக் கீதுப்பா...
ReplyDeleteசிபி, கலக்கீட்டிங்க!!!
ReplyDelete//"வாழ்க்கையைக் கற்றுக்
கொண்டாய்!
வந்த வேலை முடிந்தது!
புறப்படு"
என்றது!//
மரணத்தை இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டீங்க!!!
simbily sooberb (கேரளாகாரங்க மாதிரி படிங்க) :-)
ReplyDeleteவாங்கீரலாம் வாங்கீரலாம் இந்த தடவ பரிச :-)
ReplyDeleteஅற்புதம்..............
ReplyDeletesibi kavithai superrrrrrrrr kalakura chandru...
ReplyDeleteஎங்கட இந்த தெகாவெயே காணோமேன்னு வழிமேல் விழிவைச்சு காத்து கிடந்தது போதும், பிடிய்மைய்யா எனது பாரட்டை. நிறுபித்து விட்டீர் மீண்டும், தாங்கள் யாரென்று. வெற்றி(க்)கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநடக்கும் என்பார் நடக்காது
ReplyDeleteநடக்கா தென்பார் நடந்துவிடும்...
(என்னையும் கவிதையெல்லாம் படிக்க வைக்கிறீங்களே! அப்புறம், இதுல பொன்ஸோட யானையைப் பத்தி எதுவும் சொல்லலை!) :D
பெரிய தத்துவத்தை, எளிமையாக வடித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்!
நல்லாயிருக்கு சிபி.
ReplyDeleteஎளிமை, இனிமை!
ReplyDeleteBeautifully written..
ReplyDeleteArumai Arumai..
ஹேப்பி இண்டிப்பெண்டன்ஸ் டே!
ReplyDeletenalla kavidhai valthukkal
ReplyDeleteசிபி,
ReplyDeleteஅருமையான கவிதை; இயல்பாக இருக்கிறது.
கவிஞர் கண்ணதாசனின் "நீ மணி, நான் ஒலி" கவிதை படித்திருக்கிறீர்களா?
இப்படி ஆரம்பிக்கும்:
"பிறப்பினிலில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்"
இப்படி முடியும்:
"அனுபவித்தே தான் வருவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவமே நான் தான் என்றான்"
ரங்கா.
நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ReplyDeleteஒட்டு போடுங்க..உங்கள கருத்துக்களையும் சொல்லுங்க
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை சிபி
ReplyDeleteஅருமையாக இருக்கிறது.
ReplyDeleteவராதே எனும்போது
வரவா என்று மிரட்டும்
வாவென்று கதறும்போது
வாராமல் சிரிக்கும்