"மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன்
Wednesday, November 01, 2006
22 : இலவசமாய்!
கடந்து செல்கையில்
கண்கள் பார்த்தேன்
இலவசமாய்
சில சிமிட்டல்கள்!
பார்வையைக் கொஞ்சம்
தருவாய் என்றேன்!
இலவசமாய்
கொஞ்சம் புன்னகை தந்தாய்!
புன்னகை கொஞ்சம்
கடனாய்க் கேட்டேன்!
இலவசமாய்க் கொஞ்சம்
பூக்கள் தந்தாய்!
பூக்கள் கொஞ்சம்
தூவிடு என்றேன்!
இலவசமாய் உன்
சிநேகம் தந்தாய்!
சிநேகமும் எனக்கு
போதாதென்றேன்!
இலவசமாய் கொஞ்சம்
வெட்கம் தந்தாய்!
வெட்கம் உனக்கு
அழகு என்றேன்!
இலவசமாய் நீ
காதல் தந்தாய்!
காதலால் நானும்
மகிழ்ந்திருந்தேனே!
இலவசமாய்க்
கல்லறை
ஏனடி நீயும் தந்தாய்?
நினைவினைக் கொடுத்த
இறைவா நீயும்
இலவசமாய்
மறதியைக் கொடுத்தால்
குறைந்தா போவாய்?
Subscribe to:
Post Comments (Atom)
இது தேன்கூடு போட்டிக்கா?
ReplyDeleteநன்றாக வந்திருக்கிறது கவிதை....
தேன்கூடு போட்டிக்கேதான் லக்கியாரே!
ReplyDeleteமிக்க நன்றி!
//நினைவினைக் கொடுத்த
ReplyDeleteஇறைவா நீயும்
இலவசமாய்
மறதியைக் கொடுத்தால்
குறைந்தா போவாய்?//
நல்லாருக்குங்க சிபி. போட்டியில் வென்றிட வாழ்த்துகள். இலவசம் இலவசம்னு இத்தனை வாட்டி சொல்லிருக்கீங்க...கொத்தனார் ராயல்டிக்கு வந்து நிக்கப் போறாரு
:)
வாழ்த்திற்கு நன்றி தலை!
ReplyDeleteஇலவசம் ராயல்டிக்கு வந்தாருன்னா அவருக்கு ரெண்டு பின்னூட்டம் இலவசமாப் போடுவோம்!
இக்கவிதையில்(தலைப்புடன் சேர்த்து) இலவசம் என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சரியாகக் கூறும் முதல் நபருக்கு இலவசமாய் இரண்டு பின்னூட்டங்கள் வழங்கப்படும்.
:))
//இலவசமாய்
ReplyDeleteமறதியைக் கொடுத்தால்
குறைந்தா போவாய்?//
கடைசி வரி ரொம்ப நல்லா இருக்குங்க. ரொம்ப நல்ல கவிதை
/./
ReplyDeleteஇக்கவிதையில்(தலைப்புடன் சேர்த்து) இலவசம் என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது
/./
9(தாரா)
::)
மின்னல் 9 முறை சரியான விடை.
ReplyDeleteஅந்த விடையை கூறிய விதத்தில் நீர் எங்கோ சென்று விட்டீர். (எங்கயோ பூயிட்டீங்க மின்னல்)
:))
இலவசப் பின்னூட்டம் இரண்டும், எனக்குப் பிடித்த விதத்தில் விடையைக் கூறியமைக்காக ஸ்பெஷல் பின்னூட்டம் இரண்டும் விரைவில் உமது பதிவில் வந்து சேரும்.
nallairuku nallairuku
ReplyDeleteயோவ், இது என்ன கலாட்டா? இலவசமுன்னா எழுத எவ்வளவோ இருக்க இது என்ன கவுஜ?
ReplyDeleteஉனக்கு ஆண்டவன் எடிட் பட்டன் வைக்கவே மறந்துட்டானா? (உன்னைத் திருத்தவே முடியாது!) :)
இளா, கார்த்திக் பிரபு
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி!
//இலவசமுன்னா எழுத எவ்வளவோ இருக்க இது என்ன கவுஜ?
ReplyDelete//
கொத்ஸ்,
கவுஜ எழுதினதைச் சொல்றீங்களா? காதலை எழுதினதைச் சொல்றீங்களா?
//உனக்கு ஆண்டவன் எடிட் பட்டன் வைக்கவே மறந்துட்டானா?//
நினைவை எமக்குக் கொடுத்துவிட்டு மறதியை அவனே வைத்துக் கொண்டான்!
//நினைவினைக் கொடுத்த
ReplyDeleteஇறைவா நீயும்
இலவசமாய்
மறதியைக் கொடுத்தால்
குறைந்தா போவாய்? //
நினைக்க தெரிந்த மனமே, உனக்கு மறக்க தெரியாதா?
பழக தெரிந்த மனமே, உனக்கு விலக தெரியாதா?
கொத்துஸ்,
ReplyDeleteஒடுங்க ஒடுங்க
கவுஜ்
கவுஜ்
சுச்சூ
//பூக்கள் கொஞ்சம்
ReplyDeleteதூவிடு என்றேன்!
இலவசமாய் உன்
சிநேகம் தந்தாய்!
சிநேகமும் எனக்கு
போதாதென்றேன்!
இலவசமாய் கொஞ்சம்
வெட்கம் தந்தாய்!
வெட்கம் உனக்கு
அழகு என்றேன்!
இலவசமாய் நீ
காதல் தந்தாய்//
ஆஹா எங்கே மறைத்திருந்தீர்கள் இந்த வெட்கப்பூக்களை ?? வெட்கப்படும் காதலான அழகு கவிதை இலவசமாய் எங்களுக்கு :)) வாழ்த்துகள் தொடருங்கள் சிபி ! :))
கடைசி வரிகளை,....
ReplyDelete"நினைவினைக் கொடுத்த
இறைவா இந்த
மறதிக்கு என்ன விலை வேண்டும்
சொல்! தந்துவிடுகிறேன்!"
என முடித்திருந்தால் ஒரு பஞ்ச் இருந்திருக்குமோ?
நல்ல கவிதை!
இலவசமாக.......
வாழ்த்துகள்!
வெற்றி பெற!
கவிதை மிக நன்று.
ReplyDeleteஇலவசமாய்
ReplyDeleteகவிதை
எழுதி
எங்களை
பரவசப்படுத்திய
சிபியாரே,
வாழ்க நின் புகழ்!
வெற்றிக் கனியை
பறிக்க
வாழ்த்துக்கள்!
என்ன சார், எப்படா ரெடி, ஜூட் சொல்வாங்கண்ணு காத்திருந்த மாதிரி, டகால் னு ஒரு கவிதைய எடுத்து விடறீங்க.
ReplyDeleteகலக்குங்க.
கவிதை நல்லா இருக்கு.
அதென்ன சிபி, தலைப்புக் கொடுத்த அடுத்த நொடியே கவிதை எழுதித் தள்ளிடுறீங்க!!
ReplyDelete//அதென்ன சிபி, தலைப்புக் கொடுத்த அடுத்த நொடியே கவிதை எழுதித் தள்ளிடுறீங்க!! //
ReplyDeleteசிபி, நம்ம அக்ரிமெண்ட் பொன்ஸுக்கு தெரிஞ்சிடுச்சா :-)
போட்டிக்கான முதல் படைப்பே அசத்தலாக வந்திருக்கிறது. முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்!!!
இலவசமாய் மறதி.
ReplyDeleteஇதுதானே
வேண்டும்.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
வெற்றி பெறவேண்டும்.
இலவசமாய் பரிசும் யாராவது தராங்களா!?
ReplyDeleteசெம ஸ்மூத்தா போய்கிட்டு இருந்த கவிதையை, டப்புன்னு 'தோல்விக்கு' கொண்டு போயிட்டீங்களே. காதல்னாலேயே தோல்விதானா?
ReplyDelete"காதலால் நானும்
மகிழ்ந்திருந்தேனே!
இலவசமாய்க்
கல்லறை
ஏனடி நீயும் தந்தாய்?"
காதலால் நாமும்
மகிழ்ந்திருந்த போது
பரிசாய்
மழலையும் வந்ததோ
இலவசமாய்-னு
பாசிட்டிவா கொண்டு போயிருக்கலாமோ?
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
தேன்கூடு போட்டி படைப்புகள் விமர்சனம்
ReplyDeletehttp://valai.blogspirit.com/archive/2006/11/03/விமர்சனங்கள்-இலவசம்.html
தேன்கூடு போட்டி படைப்புகள் விமர்சனம் இங்கே
ReplyDeletehttp://valai.blogspirit.com/archive/2006/11/03/விமர்சனங்கள்-இலவசம்.html
Dear சிபி,
ReplyDelete"காதலால் நானும்
மகிழ்ந்திருந்தேனே!
இலவசமாய்க்
கல்லறை
ஏனடி நீயும் தந்தாய்?"
super , All the Best,
(This my first comment)
Gopinath
காதல் வாங்கினாலே துயரம் இலவசமோ??? :((
ReplyDeleteகவிதை நன்றாக இருந்தது!
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்!!!
இலவசமாய் கிடைத்த காதல்..
ReplyDeleteஇழந்தபின் தெரியும் அருமை..
இனிமையான கவிதை
அருமையான கவிதை சிபி. தொடர்ந்து இப்படியானன கவிதைகளை எதிர்பாக்கிறேன்.
ReplyDelete//நினைவினைக் கொடுத்த
ReplyDeleteஇறைவா நீயும்
இலவசமாய்
மறதியைக் கொடுத்தால்
குறைந்தா போவாய்?//
தேன்கூடு போட்டிக்கா? வாழ்த்துக்கள் சிபி..வெற்றி பெற..
வெர்றிக்கு வாழ்த்துக்கள் சிபி
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!
ReplyDeleteவாழ்த்துகள்!!!!!
ReplyDelete:)
நல்ல கவிதை!
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சிபி.
நேரமின்மையால் முன்னமே படிக்க முடியாது போயிற்று
வெற்றிக்கு வாழ்த்துக்கள் சிபி!!!
ReplyDeleteit great works and If you have a moment, please visit my site: the lawyer
ReplyDeleteஇலவசமாய் எவ்ளோ கொடுத்தீங்க நடுவருக்கு????
ReplyDeleteவாழ்த்துக்கள் சிபி.
(எப்படியோ நயன் சிம்பு வ பிரிச்சிட்டீங்க....ஹ்ம்ம்ம்ம் நல்லா இருந்தா சரி.)
//நினைக்க தெரிந்த மனமே, உனக்கு மறக்க தெரியாதா?
ReplyDeleteபழக தெரிந்த மனமே, உனக்கு விலக தெரியாதா?
//
நல்ல படலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நாகையாரே!
//ஆஹா எங்கே மறைத்திருந்தீர்கள் இந்த வெட்கப்பூக்களை ?? வெட்கப்படும் காதலான அழகு கவிதை இலவசமாய் எங்களுக்கு //
ReplyDeleteஆஹா! நவீன் பிரகாஷே நம்ம கவிதையைப் பாராட்டி இருக்கிறாரே!
மிக்க நன்றி! நவீன் பிரகாஷ்!
//என முடித்திருந்தால் ஒரு பஞ்ச் இருந்திருக்குமோ?
ReplyDelete//
எஸ்.கே!
பஸிடிவாக எழுதலாம்தான்.
பாஸிடிவான முடிவு கவிதை எழுதும் எண்ணத்தைத் தோற்றுவிக்கவில்லை என்பது என் பார்வை!
மிக்க நன்றி கலை அரசன் அவர்களே!
ReplyDelete//சிபியாரே,
ReplyDeleteவாழ்க நின் புகழ்!
வெற்றிக் கனியை
பறிக்க
வாழ்த்துக்கள்! //
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சோம்பேறிப்பையன் அவர்களே!
//கலக்குங்க.
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு.
//
பேட் நியூஸ் இந்தியா அவர்களே,
மிக்க நன்றி!
//அதென்ன சிபி, தலைப்புக் கொடுத்த அடுத்த நொடியே கவிதை எழுதித் தள்ளிடுறீங்க!!
ReplyDelete//
பொன்ஸ்! நீங்க கேட்ட மாதிரியே இன்னும் சிலரும் கேட்டிருக்காங்க!
ஒரு சில தலைப்புகள் கேட்டவுடனே தானா கவிதை தோணுது! அதுவும் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில்!
அப்படி எழுதின கவிதைகள்தான் மரணம், இலவசம் எல்லாம்!
:)
//போட்டிக்கான முதல் படைப்பே அசத்தலாக வந்திருக்கிறது. முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்!!!
ReplyDelete//
தலைப்பு கொடுத்த லக்கியாரின் பாராட்டுக்கு நன்றி!
//நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வெற்றி பெறவேண்டும்.
//
மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே!
//இலவசமாய் பரிசும் யாராவது தராங்களா!?
ReplyDelete//
இந்த முறை வெற்றி என்னும் மூன்றாம் பரிசை தந்திருக்கிறார்கள் வாசகர்கள் தமிழி!
மிக்க நன்றி!
//பாசிட்டிவா கொண்டு போயிருக்கலாமோ?
ReplyDelete//
நெல்லை சிவா!
இதற்கான பதிலை ஏற்கனவே எஸ்.கே அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன்!
நன்றி!
சிந்தாநதி,
ReplyDeleteதங்கள் அழகிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி!
//super , All the Best,//
ReplyDeleteகோபிநாத்,
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
//காதல் வாங்கினாலே துயரம் இலவசமோ??? :((
ReplyDelete//
மிக்க நன்றி அருட்பெருங்கோ அவர்களே!
//இலவசமாய் கிடைத்த காதல்..
ReplyDeleteஇழந்தபின் தெரியும் அருமை..
இனிமையான கவிதை
//
சாத்வீகன்,
அழகிய விமர்சனத்திற்கு நன்றி!
//அருமையான கவிதை சிபி. தொடர்ந்து இப்படியானன கவிதைகளை எதிர்பாக்கிறேன்//
ReplyDeleteமிக்க நன்றி யு.பி.தர்சன்,
நிச்சயம் எழுதுகிறேன்!
//தேன்கூடு போட்டிக்கா? வாழ்த்துக்கள் சிபி..வெற்றி பெற..
ReplyDelete//
மிக்க நன்றி கார்த்திகேயன்!
//நன்றாக வந்திருக்கிறது கவிதை//
ReplyDeleteகாண்டீபன்,
தங்கள் பார்வையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
//வெற்றிக்கு வாழ்த்துக்கள் சிபி //
ReplyDeleteமிக்க நன்றி சிறில் அலெக்ஸ்!
தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
அருட்பெருங்கோ வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி எஸ்.கே அவர்களே!
ReplyDelete//நல்ல கவிதை!
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சிபி.
//
மிக்க நன்றி ராசுக்குட்டி!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கண்ணபிரான் ரவி சங்கர்!
ReplyDeleteமியூசிக் பிளேயர்,
ReplyDeleteவருகைக்கு நன்றி!
//இலவசமாய் எவ்ளோ கொடுத்தீங்க நடுவருக்கு????
ReplyDelete//
ஆஹா! கிளம்பீட்டாங்கைய்யா! கிளம்பீட்டாங்கைய்யா!
//வாழ்த்துக்கள் சிபி.//
மிக்க நன்றி மனசு!
//
(எப்படியோ நயன் சிம்பு வ பிரிச்சிட்டீங்க....ஹ்ம்ம்ம்ம் நல்லா இருந்தா சரி.) //
இதுக்கு நான் காரணமில்லை! 1000+1 காரணம் என்று அம்மணியே சொல்லி இருக்கிறார்.
நானும் என்னோட லிஸ்டை அப்டேட் பண்ணிட்டேன். தெரியாதா உமக்கு?
//செம ஸ்மூத்தா போய்கிட்டு இருந்த கவிதையை, டப்புன்னு 'தோல்விக்கு' கொண்டு போயிட்டீங்களே.//
ReplyDeleteஇதுவே என் கருத்தும். கவிதை நன்றாக இருக்கிறது. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சிபி
ReplyDeleteகவிதை அபாரம் சிபி, வாழ்த்துக்கள்!
ReplyDelete//வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//
ReplyDeleteமிக்க நன்றி சேதுக்கரசி அவர்களே!
//வாழ்த்துகள் சிபி //
ReplyDeleteமதுமிதா! மிக்க நன்றி!
//கவிதை அபாரம் சிபி, வாழ்த்துக்கள்! //
ReplyDeleteதிவ்யா! மிக்க நன்றி!