Thursday, March 16, 2006

18 : கொஞ்சம் நில்லடி என்னவளே!

விடியட்டும் விடியட்டும்னு பார்த்திருந்தேன்!
எப்பவோ விடிஞ்சதுன்னு சொன்னாங்க!
கண்மணி உனக்கெனக் காத்திருந்தேன்! -நீ
கைப்பிடிச்சது அடுத்தவனைன்னு சொன்னாங்க!

உன் மனசில் யாருன்னு அறியாம
உன் விருப்பம் ஏதும் தெரியாம
இதுநாள் வரையிலும் காத்திருந்தேன்
இலவு காத்தகிளி கதையாச்சு!

கொஞ்சம் நில்லடி என்னவளே! - நான்
கேக்கறேன் அதையும் தந்துட்டுப் போ!
அடுத்தவன் தாலிய சுமக்கறவ - என்
இதயத்தை ஏந்தான் சுமக்கனுமோ?
எறிஞ்சிடு அதையும் எங்கிட்டயே!
எறியற நெஞ்சினில் தாங்கிக்கறேன்!

இறைவனின் கணக்கு இதுவானால்
அதை மாற்றுவதென்பது முடியாது!
உனைச் சொல்லி ஏதுக் குத்தமில்லை!
எல்லாம் என்னோட தலையெழுத்து!

5 comments:

  1. என்னங்க, எல்லாத்துக்கும் டெஸ்ட் பண்றீங்க? ஆனாலும் ரொம்ப சந்தேகங்க உங்களுக்கு..

    அதே மாதிரி உங்க இதயமும் உங்ககிட்ட தான் இருக்கும் டெஸ்ட் பண்ணிப்பாருங்க..

    ReplyDelete
  2. //என்னங்க, எல்லாத்துக்கும் டெஸ்ட் பண்றீங்க? ஆனாலும் ரொம்ப சந்தேகங்க உங்களுக்கு.. //

    என்னங்க பண்ணுறது. யாருமே கண்டுக்கலைன்னா இப்படித்தான் ஒரு டெஸ்ட் வுடுணும்னு எங்க வாத்தியாரு சொல்லியிருக்காரு!

    //அதே மாதிரி உங்க இதயமும் உங்ககிட்ட தான் இருக்கும் டெஸ்ட் பண்ணிப்பாருங்க.. //

    எல்லாருக்கும் தமாஷா போச்சு என் நெலமை! என்ன பண்ணுறது! எல்லாம் என்னோட தலையெழுத்து.
    :-)

    வருகை தந்தமைக்கும், ஆலோசனைக்கும் நன்றி பூன்ஸ்.

    ReplyDelete
  3. இவரு திருந்துறாப்ல தெரியலையே!

    :(

    ReplyDelete
  4. ஏன் இப்படி? தாத்தாவான பின்னாடியும் லோ.. லோ..ன்னு இப்படி அலைஞ்சீங்கன்னா எப்படிங்கய்யா..!

    பெரிசு.. கொஞ்சம் அடங்கியிரு.

    ReplyDelete
  5. எழுதினா மட்டும் போதுமா? தமிழ்மணத்துல இணைக்க வேணாமா? அதுக்கு இன்னொருத்தன் வந்துதான் செய்யணுமா? வைச்ச வேலைக்காரனா நானு..? செஞ்சு தொலைச்சிட்டேன்..!

    ReplyDelete