நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குதுன்னு
நடுச் சாமக் கோடங்கி
நல் வாக்கு கேளுமய்யா!
நாலு வருசமா
நாதியத்துப் போய்க்கெடந்த
சுடுகாட்டுப் பாதைக்கொரு - புதுத்
தார் ரோடு கிடைக்குதய்யா!
மாத்துத் துணியில்லேன்னு
மூனு வருசமா
மூக்காயி அழுதகுரல்
பட்டணத்தில் கேட்டுருச்சாம்!
பறந்து வருகுதய்யா
பார்சலிலே பருத்திச் சேலை!
கத்தரி வெயிலிலே
கருகிப் போன வெள்ளாமைக்கு
கண்கலங்கி நின்னதுக்கு
கடன் கொடுக்க வாராங்க!
அரை வவுத்துக் கஞ்சிக்கே
ஆலாய்ப் பறந்த சனம்
வவுராறச் சாப்பிடத்தேன்
வருகுதய்யா பிரியாணி!
பட்டனத்துச் சட்டசபை
பதவிக்காலம் முடிஞ்சிடுச்சாம்!
படியேறி வாராங்க
பாவி மக்கா ஒட்டுக் கேக்க!
என்னங்ண்ணா!
ReplyDeleteஉங்களுக்குள்ள இப்படி ஒரு கவிஞரை ஒளிச்சு வச்சுக்கிட்டு இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க? உங்கள் கவிதைகள் பலவற்றையும் இன்று படித்தேன். நன்றாக உள்ளது. ஆனால் நல்ல கவிதைகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டம் இல்லையே என்ற ஆதங்கமும் உள்ளது. கைப்புள்ள என்ற வெட்டிப்பயலோடு சுத்துவதால் உங்களை "தீராத வெளயாட்டுப் பிள்ளை"னு மக்கள் நெனச்சுட்டாங்க போலிருக்கு? :)-
எனக்கு இன்னுமொரு விதத்திலயும் சந்தோசம். நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல ரெண்டு கவிஞர்கள்.
1. கவிஞர் நாமக்கல் சிபி
2. கவிஞர் தேவ்
நேரம் கெடச்சுதுனா தலயைப் பத்தியும் ஒரு பாட்டு எழுதுங்கய்யா!
:)))-
நல்ல கவிதை சிபி,
ReplyDeleteபிற பதிவுகளையும் படிக்கிறேன்.
//உங்களுக்குள்ள இப்படி ஒரு கவிஞரை ஒளிச்சு வச்சுக்கிட்டு இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க? உங்கள் கவிதைகள் பலவற்றையும் இன்று படித்தேன். நன்றாக உள்ளது. ஆனால் நல்ல கவிதைகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டம் இல்லையே என்ற ஆதங்கமும் உள்ளது//
ReplyDeleteவாங்க தலை! பாராட்டுக்கும், உங்க மேலான ஆதங்கத்துக்கும் நன்றி. நமக்காக ஆதங்கப்பட உங்களை விட்டா வேற யாரு இருக்கா!(குமரன் கோவிச்சிக்கப் போறாரு)
//நேரம் கெடச்சுதுனா தலயைப் பத்தியும் ஒரு பாட்டு எழுதுங்கய்யா!//
பாட்டுதான எய்தீட்டாப் போச்சு!
வாங்க சிவ முருகன். முதன் முதலாய் வந்திருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅட!! அசத்தறீங்க.. எப்படிங்க இதெல்லாம்..
ReplyDelete//பாவி மக்கா ஒட்டுக் கேக்க! // அசத்தல்
அன்புடன்
கீதா
////பாவி மக்கா ஒட்டுக் கேக்க! // அசத்தல்//
ReplyDeleteநன்றி கீதா. ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க!
நம்ம ஜெகன்மோகன் உங்க வீட்டு விஸேஷத்தையும் சொன்னாரு. வாழ்த்துக்கள்!
முதல் தாலாட்டுக் கவிதை என்னுடையதா இருக்கும்.
வணக்கம் நாமக்கல் சிபி ,
ReplyDeleteநல்ல கவிதை. நானும் கொஞ்சநாள் நாமக்கலில் இருந்தேன். உங்கள் பிற பதிவுகளும் நன்றாக உள்ளது.