Monday, April 03, 2006

19 : உனக்காய் வருந்துகிறேன்!

என் காதல்
கடிதத்தை
வாங்க மறுத்த
என் தோழிக்காய்
இப்போது வருந்துகிறேன்!

அழகான
கவிதையொன்றை
வாசிக்கத் தவறிவிட்டாள்!

54 comments:

  1. நான் நிறைய முறை இப்படி நினைத்ததுண்டு. ஆனால் அதே நேரத்தில் கவிதையால் என் மனதைக் கவர முயன்று தோற்றுப்போன இன்னொரு கல்லூரித் தோழியும் அப்படித்தானே என்னைப் பற்றி நினைத்திருப்பாள்? :-)

    ReplyDelete
  2. குமரன்,
    படிக்கும்போது உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருந்திருப்பாங்க போலத் தெரியுதே.

    ReplyDelete
  3. சிபி,
    இந்தக் கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. //
    நேரத்தில் கவிதையால் என் மனதைக் கவர முயன்று தோற்றுப்போன இன்னொரு கல்லூரித் தோழியும் அப்படித்தானே என்னைப் பற்றி நினைத்திருப்பாள்
    //

    ஆமாம் குமரன்!
    அவர்களுக்காகவும் சேர்த்து வருந்த வேண்டியதுதான்.

    அப்புறம் குமரன், இந்த பின்னூட்டத்தை வீட்டுல பார்த்துடப் போறாங்க! ரெண்டு நாளைக்கு வீட்டுல இருகற சொம்பு, தட்டு, பாத்திரம், பண்டமெல்லாம் வருத்தப்படும்! :-)

    ReplyDelete
  5. திரு.'குமரன்' கூற்றில் ஏதோ உதைக்கிறதே!

    'சிபி'யவள் கடிதத்தை வாங்க மறுத்தவர்.
    'குமரன்' தோழியோ, கவிதையால் மனங்கவர முயன்றவர்.

    முன்னவருக்குக் கடிதத்தில் இருப்பது கவிதை எனத் தெரியாது.
    ஆனால், பின்னவருக்கோ, அது கவிதை எனத் தெரிந்தும் மறுத்தவர்.


    அவர், அழகான கவிதையொன்றை வாசிக்கத் தவறியவர்.[சிபியவள்]
    இவரோ, கவிதை எழுதியும் மனம் கவர முடியாதவர்![குமரன் தோழி]

    சரிதானே!

    :-)

    ReplyDelete
  6. வீட்டுல சொல்லாம இங்க வந்து சொல்வேனா? :-) வீட்டுல நம்ம கதை எல்லாத்தையும் சொல்லியாச்சு. அவங்களுக்கும் கல்லூரி கதைகள் சொல்லவும் கேட்கவும் ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  7. //குமரன்,
    படிக்கும்போது உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருந்திருப்பாங்க போலத் தெரியுதே.//

    அதுதானே உண்மை!

    ReplyDelete
  8. //சிபி,
    இந்தக் கவிதை நல்லா இருக்கு.//

    ரொம்ப நன்றி முத்து!

    அப்போ மற்றவை(!?) :(

    ReplyDelete
  9. //இந்தக் கவிதை நல்லா இருக்கு. அந்தக் கவிதையும் நன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் //

    ஆமாம் புதுப்புத்தகம். நன்றாகத்தான் இருந்தது. வாங்கிப் படித்தாவது பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
  10. //good one ;-) //

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி செல்வேந்திரன்!

    ReplyDelete
  11. //அவர், அழகான கவிதையொன்றை வாசிக்கத் தவறியவர்.[சிபியவள்]
    இவரோ, கவிதை எழுதியும் மனம் கவர முடியாதவர்![குமரன் தோழி]
    //

    உண்மைதான் Sk.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. //
    வீட்டுல சொல்லாம இங்க வந்து சொல்வேனா? :-) வீட்டுல நம்ம கதை எல்லாத்தையும் சொல்லியாச்சு. அவங்களுக்கும் கல்லூரி கதைகள் சொல்லவும் கேட்கவும் ரொம்பப் பிடிக்கும்.
    //

    இந்த விஷயத்துல நானும் உங்களைப்போலவே அதிர்ஷ்டசாலி குமரன்! :)

    ReplyDelete
  13. ஆஹா SK பாயிண்டப் புடுச்சுட்டீங்களே...உண்மைதான் கவிதையைப் படிச்சப் பிறகு தான் நான் மறுத்தேன். கவிதைகள் அருமையா இருந்தது. கவிதைகளை ஊக்குவித்தேன். ஆனால் உட்பொருளை ஊக்குவிக்க முடியலை.

    ReplyDelete
  14. //குமரன்,
    படிக்கும்போது உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருந்திருப்பாங்க போலத் தெரியுதே//

    படிக்கும் போது மட்டும் தானா முத்து? இப்ப தமிழ்ப்பதிவுகள்ல எழுதுறப்ப இல்லையா என்ன? :-)

    ஒருவர் இருவரைத் தவிர எல்லாருமே அண்ணான்னு சொல்லிடுவாங்க. நானும் கவலைப் படுறது இல்லை. இப்ப நான் எல்லாரையும் அண்ணா, அக்கான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னும் யாரையும் தம்பி, தங்கச்சின்னு கூப்புடலை இங்க. :-)

    ReplyDelete
  15. //கவிதைகள் அருமையா இருந்தது. கவிதைகளை ஊக்குவித்தேன். ஆனால் உட்பொருளை ஊக்குவிக்க முடியலை.//

    பின்னூட்டம்னு நீங்க எதுவும் லெட்டர் குடுத்தீங்களா குமரன்? :)

    ReplyDelete
  16. //இப்ப நான் எல்லாரையும் அண்ணா, அக்கான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னும் யாரையும் தம்பி, தங்கச்சின்னு கூப்புடலை இங்க//

    பின்ன! நமக்கென்ன வயசா ஆய்டுச்சு!
    இப்பத்தான் நாப்பத்தன்ஞ்சு ஆரம்பிக்குது!

    :)

    ReplyDelete
  17. இந்த விஷயத்துல நான் கொஞ்சம் ஜாக்கிரதை. நேரா போயி பாத்து பேசிட்டேன். :-)

    ReplyDelete
  18. ஆஹா... வாய் தவறி ஏதோ சொல்லிட்டேன். சிபி, முத்து எல்லாரும் போட்டு வாங்கறாங்களே... இனிமே ஜாக்கிரதையா இருக்கணும். :-)

    ReplyDelete
  19. 45-ஆ. அடப்பாவி. என் ப்ரொஃபைலைப் போயிப் பாருமையா...நானும் உங்களை மாதிரி சிசிசின்னப் பையன் தான்.

    ReplyDelete
  20. //சிபி, முத்து எல்லாரும் போட்டு வாங்கறாங்களே... இனிமே ஜாக்கிரதையா இருக்கணும்.//

    அட்டா! தனிப் பதிவா போடுமளவுக்கு குமரனிடம் விஷயங்கள் இருக்கும் போல் இருக்கிறதே!

    குமரன் ஒரு நாளைக்கு அப்படியே சரக்கு அடிக்கப் போலாமா? :)
    (வேறெதுக்கு போட்டு வாங்கத்தான்)

    ReplyDelete
  21. //45-ஆ. அடப்பாவி. என் ப்ரொஃபைலைப் போயிப் பாருமையா...நானும் உங்களை மாதிரி சிசிசின்னப் பையன் தான்//

    அட! போங்க குமரன்! என் புரொஃபைலில் நான் இருபதுன்னு போட்டு வைத்திருக்கிறேன். :)

    ReplyDelete
  22. //இந்த விஷயத்துல நான் கொஞ்சம் ஜாக்கிரதை. நேரா போயி பாத்து பேசிட்டேன்//

    அதான! ரெக்கார்டெல்லாம் நாமே ஏற்படுத்தித்தர முடியாது இல்லையா!

    ReplyDelete
  23. கூட்டாளி,

    என்ன ஆச்சி உமக்கு ?. நமக்குத்தான் சோகம் பிச்சிகிச்சி, அங்கயுமா ? பெண்களை விட அழகான கவிதை இந்த உலகில் உண்டா .. நான் அறிந்த வரையில் இல்லை என்றே கூறுவேன்.

    ReplyDelete
  24. ரொம்ப வருத்தப்படாதீங்க சிபி.. பதிவுல போட்டுடுங்க.. நாங்களாவது தவற விடாம படிக்கறோம் :)

    ஆனாலும் எனக்கொரு சந்தேகம்; அந்த கவிதையை அப்படியே உல்டா பண்ணி உங்க வீட்டம்மா கிட்ட குடுத்துட்டீங்க தானே??

    ReplyDelete
  25. //ரொம்ப வருத்தப்படாதீங்க சிபி.. பதிவுல போட்டுடுங்க.. நாங்களாவது தவற விடாம படிக்கறோம் :)//

    எனக்கு முழுதாய் நினைவில் இல்லை. நினைவில் கொண்டுவர முயற்சி செய்கிறேன். இருப்பினும் அதன் பின்னர் என் நண்பனொருவன் அதை கேட்டுப் பெற்றுக் கொண்டான். அவனிடமுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

    //ஆனாலும் எனக்கொரு சந்தேகம்; அந்த கவிதையை அப்படியே உல்டா பண்ணி உங்க வீட்டம்மா கிட்ட குடுத்துட்டீங்க தானே??
    //

    சேச்சே அப்படியெல்லாம் இல்லை.

    ReplyDelete
  26. //தன்னை விட வேறு எந்த கவிதையும் அழகு இல்லை என்று எண்ணிணார் போலும். //

    புரியலையே சரவணபிரபு! (!?)
    நீங்க யாரைப் பற்றி சொல்றீங்க?

    (நெசமா எனக்கு தெரியவே தெரியாது :-) )

    ReplyDelete
  27. //நமக்குத்தான் சோகம் பிச்சிகிச்சி, அங்கயுமா ? //

    பேராசிரியரே!

    உங்களுக்குமா? அடப் பாவமே!

    //பெண்களை விட அழகான கவிதை இந்த உலகில் உண்டா .. நான் அறிந்த வரையில் இல்லை என்றே கூறுவேன். //

    உண்மைதான்.

    ReplyDelete
  28. அருமையான கவிதை சிபி.

    நான் என் கல்லூரி நாட்களில் என் நன்பன் ஒருவன் தன் காதலிக்காக பல கவிதைகளை என்னிடமிருந்து எழுதிகொண்டு செல்வான். அதில் நானெழுதிய கவிதை,

    "உன்னகாக மற்றொருவனை கணவு காண செய்தேன்,
    களவு கொள்ள என் கணவில் வருப்போவது யாரோ?"

    என்ற கவிதை கண்டு தனிமையில் அவளிடம் 'டோஸ்' வாங்கியது தனி கதை.

    ReplyDelete
  29. //தன்னை விட வேறு எந்த கவிதையும் அழகு இல்லை என்று எண்ணிணார் போலும். //


    சரவணப்பிரபு,

    நான் கொடுக்கச் சென்றது கவிதைதான்னு அந்தத் தோழிக்குத் தெரியாது!

    ReplyDelete
  30. //அருமையான கவிதை சிபி.//

    நன்றி சிவமுருகன்.

    //என்ற கவிதை கண்டு தனிமையில் அவளிடம் 'டோஸ்' வாங்கியது தனி கதை. //

    'டோஸ்' வாங்கியது நீங்களா? உங்கள் நண்பரா?

    ReplyDelete
  31. 'டோஸ்' எனக்கு, 'சிறப்பு டோஸ்' என் நன்பனுக்கு. நான் எழுதிய கடைசி கவிதையும்(காதலுக்குகாக) அது தான்.

    என் கடந்த காலத்தை மறக்கவே வலையில் சுற்றி வந்தேன். மீண்டும் பழசை கிளரவேண்டாம் என்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் (எண்ணங்களை).

    ReplyDelete
  32. //'டோஸ்' எனக்கு, 'சிறப்பு டோஸ்' என் நன்பனுக்கு.//

    அது சரி. :)

    //என் கடந்த காலத்தை மறக்கவே வலையில் சுற்றி வந்தேன்//

    ம்.ம். ஏதோ ஒரு பெரிய ஃப்ளாஷ் பேக் உண்டு போல. நம்மளை மாதிரியே! :(

    //மீண்டும் பழசை கிளரவேண்டாம் என்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் //

    ஆமாம். ஆமாம். அதுதான் சரி!

    தொடர்ந்து தரும் வருகைக்கு நன்றி சிவமுருகன்.

    ReplyDelete
  33. நானே ஒரு கவிதை, நமக்கு எதுக்கு இன்னொரு கவிதைனு நினைத்து விட்டாளோ?. மிக்க நன்றி என் பிளாக்கு வருகை புரிந்தமைக்கு! (he hee,தொடர்ந்து வாங்க)

    ReplyDelete
  34. நல்லவேளை
    நான் கொடுத்த
    காதல் கடிதத்தை வாங்க நீ
    தவறி விட்டாய்

    இல்லையென்றால்
    செமையாய் அடிவாங்கியிருப்பேன்
    உன் அண்ணனிடம்

    ReplyDelete
  35. //நானே ஒரு கவிதை, நமக்கு எதுக்கு இன்னொரு கவிதைனு நினைத்து விட்டாளோ?. மிக்க நன்றி என் பிளாக்கு வருகை புரிந்தமைக்கு! (he hee,தொடர்ந்து வாங்க)//

    அட! நான் சொல்ல நினைத்ததையே நீங்களும் சொல்லியிருக்கீங்களே அம்பி!

    இதைத்தான் Great Men Think Alikeனு சொல்வாங்களோ! :-)

    ReplyDelete
  36. //இல்லையென்றால்
    செமையாய் அடிவாங்கியிருப்பேன்
    உன் அண்ணனிடம்
    //

    ஓ! இதுதான் பாஸிடிவ் அப்ரோச் என்பதோ? நன்றி நிலவு நண்பன்!

    ReplyDelete
  37. தங்களுடைய கவிதை நன்றாக உள்ளது ! !

    ReplyDelete
  38. தனியஞ்சல் பார்க்கவும்.

    ReplyDelete
  39. சிபி!

    சிறந்த சிந்தனைகள்..எங்கள் நினைவு மண்ணை கிளறி புதிய சிந்தனை விதைகளை விதைக்கும் சுகமான உங்கள் கவிதைகள்.

    வாழ்க! வளர்க!!

    என்றென்றும் அன்புடன்

    ஸ்ரீதர்

    ReplyDelete
  40. நாமக்கல் சிபி. உங்கள் கவிதைகள் பெரும்பாலும்(?) நஙு உள்ளன. இந்த கவிதை சிறிதாயினும், சிறப்பு! கவிதைக்கு பின்னூட்டங்கள் இன்னும் அழகு சேர்க்கின்றன.
    நான் நாமக்கல்லை கதைக் கருவாக வைத்து ஒரு கதை எழுதினேன். (குறி!) படித்தீர்களா? (http://maraboorjc.blogspot.com)

    ReplyDelete
  41. உங்கள் சுவாசிப்பை வாசிக்க மறந்தாளோ, மறுத்தாளோ, நீங்கள் உங்கள் மனங்கவர்ந்தவளை நேசிப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

    ReplyDelete
  42. கவிதைகளின் நடை அழகு
    மொட்டுக்கள்
    மலர்ந்து
    சூடியிருந்தால்
    இந்த "மலர்"
    பூத்திருக்குமா!

    ReplyDelete
  43. Roumba nalla iruku.

    pavithra.

    ReplyDelete
  44. உங்கள் மனதை அப்படியே படம் பிடித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  45. //சிறந்த சிந்தனைகள்..எங்கள் நினைவு மண்ணை கிளறி புதிய சிந்தனை விதைகளை விதைக்கும் சுகமான உங்கள் கவிதைகள்.

    வாழ்க! வளர்க!!
    //

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்ரீதர்.

    ReplyDelete
  46. //இந்த கவிதை சிறிதாயினும், சிறப்பு! கவிதைக்கு பின்னூட்டங்கள் இன்னும் அழகு சேர்க்கின்றன.
    //

    நன்றி திரு,சந்திரசேகர் அவர்களே!
    அழகு சேர்க்கும் பின்னூட்டங்கள்தானே நம்மை இன்னும் ஊக்கப் படுத்துகின்றன!

    ReplyDelete
  47. //நீங்கள் உங்கள் மனங்கவர்ந்தவளை நேசிப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
    //

    ம். நேசித்தவர்களை எப்படி மறக்க முடியும் ராகவன்?

    நன்றி.

    ReplyDelete
  48. //கவிதைகளின் நடை அழகு//

    நன்றி சித்தன் அவர்களே!

    //மொட்டுக்கள் மலர்ந்து சூடியிருந்தால்
    இந்த "மலர்" பூத்திருக்குமா! //

    புரியவில்லையே?

    ReplyDelete
  49. //Roumba nalla iruku.//

    தங்கள் விமர்சனத்திற்கு நன்றி பவித்ரா அவர்களே!

    ReplyDelete
  50. //உங்கள் மனதை அப்படியே படம் பிடித்து விட்டீர்கள்.
    //

    மனதைப் படம் பிடிப்பவைதானே கவிதைகள் மேடம்!

    நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே!

    ReplyDelete
  51. சிபி சார்,

    உனக்காய் மகிழ்கிறேன்னு ஒரு கவிதை சீக்கிரம் போடுங்க, எத்தன நாள் தான் வருந்திகிட்டே இருக்கிறது?

    ReplyDelete
  52. சிவமுருகனுக்காக எழுதுங்கள். அவருக்கும் மகிழ்வாக இருக்கட்டும். உங்களுக்கும் மகிழ்வாக இருக்கட்டும்.

    ReplyDelete
  53. எஸ்கேப் ஆகிட்டாங்கன்னு சொல்லுங்க ;-)

    ReplyDelete