Wednesday, November 30, 2005

ஆட்டோகிராஃப்


நீ வேறு நான் வேறா?
பின் ஏன் இந்த பிரிவுரை படலம்?

இல்லை இல்லை !
நீ வேறு நான் வேறு
என்றுதானே
இப்பிரபஞ்சம் சொல்கிறது.

ஆம்! உன்மை என்றுதான்
தோன்றுகிறது!

இன்றோ நாளையோ,
நாளை மறு நாளோ,
சில ஆண்டுகள் கழித்தோ,
பல ஆண்டுகள் கழித்தோ
நாம் பிரியத்தானே போகிறோம்!

"இவ்வுலகில் நாம் உதிர்க்கப்பட்டபோது
இப்பிரபஞ்சத்தில் பிறக்கும்போது
ஒன்றாய்த்தானே பிறந்தோம்!
பின் ஏன் நாம்பிரிவதாம்?"
என்ற உன் கூக்குரல்
எனக்கு புரிகிறது!

என்ன செய்வது?
என் கடமை முடிந்ததென்று
காலன் என்னை
அழைக்கும்போது
நான் சென்றுதானே ஆகவேண்டும்.

நான் செல்ல மறுத்து
அடம்பிடித்தால்
காலனால் தரப்படும்
வலியும், ரணமும், வேதனையும்
உன்னையல்லவா வதைக்கும்!
அதனால் நாம் பிரியத்தான் வேண்டும்!

பிரிந்த பின்னர் என்ன செய்வோம்?
நான் காற்றோடு காற்றாக பேயாய்!
நீ மண்ணோடு மண்ணாக பிணாமாய்! - ஆக
ஐம்பூதங்களுள்
ஆளுக்கொன்றாய் நாம்!
அதுதான் நிஜம்..!

மரித்துக்கொண்டிருப்பது மனித இனம்தானே....!





உரிமைக்குரல் எழுப்பும்
வேட்டுச் சத்தங்கள்!
உலகின் செவிகளுக்கும்
கேட்கும் வண்ணம்!

சிறகுகள் பிய்ந்திடுமோ
என்ற அச்சம்
சமதானப் புறாக்களுக்கு
அந்த வான் மீது
வட்டமிட்டுப் பறக்க!

துப்பாக்கிச் சத்தத்தில்தான்
பொழுது விடிகிறது!
துப்பாக்கிச் சத்தத்தில்தான்
பொழுது மடிகிறது!

குண்டுகளின் முழக்கம்!
பினங்களின் குவியல்!
இரத்த ஆறுகள்!
இவற்றுக்கிடையில்
ஏதேனும் ஒரு இனம்
வெல்லத்தான் போகிறது!

ஆனால்
அதுவரை
மரித்துக்கொண்டிருப்பதென்னவோ
மனித இனம்தானே....!

Saturday, November 26, 2005

நரகம் என்று பெயர் கொள்க!

உயிரினம் இல்லாத
ஊரொன்று உண்டென்றால்
காதல் இல்லாத
ஊரும் உண்டென்க!

இதயம் இல்லாத
மனிதர் உண்டென்றால்
காதல் இல்லாத
மனிதரும் உண்டென்க!

அலைகள் இல்லாத
கடலும் உண்டென்றால்
காதல் இல்லாத
கடற்கரை உண்டென்க!

காற்றே இல்லாத
உலகம் உண்டென்றால்
காதல் இல்லாத
உலகம் உண்டென்க! - அதற்கு
நரகம் என்று பெயர் கொள்க!