
நீ வேறு நான் வேறா?
பின் ஏன் இந்த பிரிவுரை படலம்?
இல்லை இல்லை !
நீ வேறு நான் வேறு
என்றுதானே
இப்பிரபஞ்சம் சொல்கிறது.
ஆம்! உன்மை என்றுதான்
தோன்றுகிறது!
இன்றோ நாளையோ,
நாளை மறு நாளோ,
சில ஆண்டுகள் கழித்தோ,
பல ஆண்டுகள் கழித்தோ
நாம் பிரியத்தானே போகிறோம்!
"இவ்வுலகில் நாம் உதிர்க்கப்பட்டபோது
இப்பிரபஞ்சத்தில் பிறக்கும்போது
ஒன்றாய்த்தானே பிறந்தோம்!
பின் ஏன் நாம்பிரிவதாம்?"
என்ற உன் கூக்குரல்
எனக்கு புரிகிறது!
என்ன செய்வது?
என் கடமை முடிந்ததென்று
காலன் என்னை
அழைக்கும்போது
நான் சென்றுதானே ஆகவேண்டும்.
நான் செல்ல மறுத்து
அடம்பிடித்தால்
காலனால் தரப்படும்
வலியும், ரணமும், வேதனையும்
உன்னையல்லவா வதைக்கும்!
அதனால் நாம் பிரியத்தான் வேண்டும்!
பிரிந்த பின்னர் என்ன செய்வோம்?
நான் காற்றோடு காற்றாக பேயாய்!
நீ மண்ணோடு மண்ணாக பிணாமாய்! - ஆக
ஐம்பூதங்களுள்
ஆளுக்கொன்றாய் நாம்!
அதுதான் நிஜம்..!
சோதனிப் பின்னூட்டம்
ReplyDeletesuperb
ReplyDeletePinnitennga Sibhi..
ReplyDeleteKrish
வாங்க விபா மற்றும் கிரிஷ்!
ReplyDeleteமிக்க நன்றி!
சிபி,
ReplyDeleteரொம்ப நல்லா இருந்தது..வித்தியாசமாய்...
ஆமா, கவிதை எல்லாம் எழுதுவீங்களா? கலக்கறீங்க போங்க..
//ரொம்ப நல்லா இருந்தது..வித்தியாசமாய்...
ReplyDeleteஆமா, கவிதை எல்லாம் எழுதுவீங்களா? கலக்கறீங்க போங்க.. //
வாங்க மனதின் ஓசை!
நான் தொடங்கிய முதல் பிளாக் இதுதான். இதன் பிறகுதான் பிதற்றவும் ஆரம்பித்தேன்.
மிக்க நன்றி!
ஓ.. அப்ப இதுதான் மீள்பதிவா? சரி சரி..
ReplyDelete