Monday, January 16, 2006

பிரிவுரை படலம்..!

கல்லூரி நாட்கல் முடியப்போகும் தருவாயில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆட்டோகிராப்ஃகளை பரிமாறிக்கொண்டபோது, என்னுள் தோன்றியது இத்தககய பிரிவுரை படலம்..!
உடலுக்கு உயிர் எழுதும் ஆட்டோகிரப்ஃ

நீ வேறு நான் வேறா?
பின் ஏன் இந்த பிரிவுரை படலம்?

இல்லை இல்லை !
நீ வேறு நான் வேறு
என்றுதானே
இப்பிரபஞ்சம் சொல்கிறது.

ஆம்! உன்மை என்றுதான்
தோன்றுகிறது!

இன்றோ நாளையோ,
நாளை மறு நாளோ,
சில ஆண்டுகள் கழித்தோ,
பல ஆண்டுகள் கழித்தோ
நாம் பிரியத்தானே போகிறோம்!

"இவ்வுலகில் நாம் உதிர்க்கப்பட்டபோது
இப்பிரபஞ்சத்தில் பிறக்கும்போது
ஒன்றாய்த்தானே பிறந்தோம்!
பின் ஏன் நாம்பிரிவதாம்?"
என்ற உன் கூக்குரல்
எனக்கு புரிகிறது!

என்ன செய்வது?
என் கடமை முடிந்ததென்று
காலன் என்னை
அழைக்கும்போது
நான் சென்றுதானே ஆகவேண்டும்.

நான் செல்ல மறுத்து
அடம்பிடித்தால்
காலனால் தரப்படும்
வலியும், ரணமும், வேதனையும்
உன்னையல்லவா வதைக்கும்!
அதனால் நாம் பிரியத்தான் வேண்டும்!

பிரிந்த பின்னர் என்ன செய்வோம்?
நான் காற்றோடு காற்றாக பேயாய்!
நீ மண்ணோடு மண்ணாக பிணாமாய்! - ஆக
ஐம்பூதங்களுள்
ஆளுக்கொன்றாய் நாம்!
அதுதான் நிஜம்..!

7 comments:

  1. //காலனால் தரப்படும்
    வலியும், ரணமும், வேதனையும்
    உன்னையல்லவா வதைக்கும்!
    //
    அருமையான உணர்வு வரிகள். நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிபி

    ReplyDelete
  2. //அருமையான உணர்வு வரிகள். நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிபி
    //

    மிக்க நன்றி கோவியாரே!

    (இருப்பினும் தங்கள் வாரம் இன்னும் நடப்பில் உள்ளது என்பதை நான் மறந்துவிடவில்லை :)
    )

    ReplyDelete
  3. //நான் காற்றோடு காற்றாக பேயாய்!
    நீ மண்ணோடு மண்ணாக பிணாமாய்! - ஆக
    ஐம்பூதங்களுள்
    ஆளுக்கொன்றாய் நாம்! //

    ஹ்ம்.
    நிசப்தம் மட்டுமே
    இதற்குப் பதிலாய்
    மயான அமைதில்
    நான்...


    மீண்டும் அருமையான ஒன்று !

    ReplyDelete
  4. நாமக்கல் சிபி,

    //இன்றோ நாளையோ,
    நாளை மறு நாளோ,
    சில ஆண்டுகள் கழித்தோ,
    பல ஆண்டுகள் கழித்தோ
    நாம் பிரியத்தானே போகிறோம்!//

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். இக் கவிதையைப் படிக்கும் போது ஏதோ இனம்புரியாத துக்கம் மனதை வாட்டுகிறது. பல நண்பர்களையும் , உறவுகளையும் பல சந்தர்ப்பங்களில் பிரிந்த வேதனையோ தெரியாது.

    பி.கு:- அடடா, நீங்கள் நாமக்கலா? கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவர். இதை நான் என் ஆறுப்பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல், கவிஞர் இராமலிக்கம் பிறந்த மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே கவித்திறன் உள்ளனரோ என வியப்படைய வைக்கும் வண்ணம் கவி புனைந்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //ஹ்ம்.
    நிசப்தம் மட்டுமே
    இதற்குப் பதிலாய்
    மயான அமைதில்
    நான்...
    //

    உஷ்..! இதை மட்டும் சொல்லி விடுகிறேன் தெகா!

    மிக்க நன்றி தெகா.

    மன்னிக்கவும். உம் நிசப்தத்தைக் கலைத்ததற்காக! (கலாய்த்ததற்காக அல்ல)

    ReplyDelete
  6. அடடா! வெற்றி முதல் முறையாய் நம் வலைப் பூ பக்கம் வருகை புரிந்திருக்கிறது.

    :))


    //அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். இக் கவிதையைப் படிக்கும் போது ஏதோ இனம்புரியாத துக்கம் மனதை வாட்டுகிறது. பல நண்பர்களையும் , உறவுகளையும் பல சந்தர்ப்பங்களில் பிரிந்த வேதனையோ தெரியாது//

    உண்மைதான் வெற்றி! அந்த துக்கம் என்னுள் எழுந்தபோதுதான் இந்த கவிதையும் எழுந்தது.

    ReplyDelete
  7. வெற்றி,

    கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில்தான் எங்கள் வீடும் இருக்கிறது.

    ReplyDelete