Tuesday, February 14, 2006

11 : காணி நிலம் கேட்டாயே!




காணி நிலம்
வேண்டுமென்று
கேட்டாயே பாரதி!
கிரயப் பத்திரத்தை
ஏன்
கேட்க மறந்தாய்?

அங்கே பார்!
நீ
கேட்டுப் பெற்ற
காணி நிலமும்
ஆக்ரமிப்புகளால்
அழிந்து கொண்டிருக்கிறது!

வரைபடத்திலிருந்து கூட!

9 comments:

  1. சிபி நல்ல கவிதை.

    ReplyDelete
  2. நன்றி தில். பிளாகர் ஐடி தொடங்கியாச்சு! பதிவுகளையும் ஆரம்பிக்கலாமே!

    ReplyDelete
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செந்து!

    ReplyDelete
  4. சிபி முன்டாசு கவிஞன் ஒரு தீவிரவாதி,

    கண்ணீர் வரவழைக்கும் கண்ணீர்புகை கவிதைகளை வீசுபவன்.

    தன் செயலில், சொல்லில் தீவரமானவன்.

    அவன் கேட்டதை இது நாள் வரை யாரும் புரிந்து கொள்ளவில்லை. பிரித்தது பாரதியல்ல, பாரதியின் பாதத்தில் இருந்தவரல்ல, அவரை பற்றி எண்ணாதவர்கள், அவரை மறந்தவர்கள், நினைவால் துறந்தவர்கள்.

    ReplyDelete
  5. ஆஹா ஆஹா... பாரதிக்கே இந்த நிலமை வந்துடுமா இப்ப??

    ReplyDelete
  6. //ஆஹா ஆஹா... பாரதிக்கே இந்த நிலமை வந்துடுமா இப்ப?? //

    அட! அதையேன் கேக்கறீங்க கீதா?

    ReplyDelete