சமையற் பொழுதினில்
சடுதியில் நுழைவாய்!
சத்தம் இன்றியே
சட்டெனத் தொடுவாய்!
விசுக்கென திரும்பினால்
விலகியே நகர்வாய்!
வம்பாய் நீயும்
கரம்பிடித்திழுப்பாய்!
மடியினிற் சாய்ந்தெனை
மயங்கிடச் செய்வாய்!
விரல்களை நீட்டி - என்
முகம்தனைத் தொடுவாய்!
தழுவிட நினைத்தே
தவிப்பாய் வருவாய்! - நான்
தழுவிட நினைத்தால்
தவிர்ப்பாய் நகர்வாய்!
என் இதழினில்
இச்சென்று
முத்தங்கள் பெறுவாய்!
எனக்கொன்று கேட்டால்
ஏளனம் செய்வாய்!
உன் குறும்புகள்
அனைத்தும்
கரும்புகள் எனக்கு!
சிறிதே குறையினும்
ஏக்கங்கள் பிறக்கும்!
என் கரு
சுமந்த
என் உயிர் நீயே!
உன் குறும்புகளாலே
உயிர் தருவாயே!
டிசம்பர் மாத தேன்கூடு போட்டிக்கு
தள,
ReplyDeleteகவிதை சூப்பருங்க. டக்குன்னு நெனச்சா எப்படித் தான் எழுதறீங்களோ?
குறும்புதான் போங்க...
ReplyDeleteநல்லாவே கீது...
வசீகரா.. என் நெஞ்சினிக்க மெட்டுல ஒரு தபா பாடிக்கிறேன்...
போட்டிக்கான பாட்டுன்னு நினக்கிறேன்...
நல்லா கீதுன்னு வோட்டு போட நான் ரெடி.. வோட்டு பொட்டி எங்கப்பா...
குறும்புக் கவிதையா...இல்ல உள்ளத உள்ளபடி சொன்ன கவிதையா ;-)
ReplyDeleteநல்லாயிருக்கு. போட்டிக்கு எனது வாழ்த்துகள்.
குறும்பு கவிதை வரிகள்
ReplyDeleteஅத்தனையும் கரும்பு!!
"வெற்றி"யே வந்து வாழ்த்தியாச்சு!
பிறகென்ன?!!
\"என் கரு
ReplyDeleteசுமந்த
என் உயிர் நீயே!
உன் குறும்புகளாலே
உயிர் தருவாயே!\"
அருமையான வரிகள், ரசித்தேன் உங்கள் 'குறும்பு' கவிதையை, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//கவிதை சூப்பருங்க//
ReplyDeleteரொம்ப நன்றி தலை!
//டக்குன்னு நெனச்சா எப்படித் தான் எழுதறீங்களோ?
//
தலைப்பு அந்த மாதிரி! :)
சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி!
அரை பிளேடு!
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
//போட்டிக்கான பாட்டுன்னு நினக்கிறேன்...
நல்லா கீதுன்னு வோட்டு போட நான் ரெடி.. வோட்டு பொட்டி எங்கப்பா//
தலை! அவ்வ்வ்வ்...........
(ஒரே ஃபீலிங்காய்டுச்சுப்பா)
//வசீகரா.. என் நெஞ்சினிக்க மெட்டுல ஒரு தபா பாடிக்கிறேன்...//
:))
//குறும்புக் கவிதையா...இல்ல உள்ளத உள்ளபடி சொன்ன கவிதையா //
ReplyDeleteஇராகவன்,
உள்ளதை உள்ளபடி சொன்ன கவிதை இது!
வாழ்த்துக்களுக்கு நன்றி!
//குறும்பு கவிதை வரிகள்
ReplyDeleteஅத்தனையும் கரும்பு!!
//
எஸ்.கே! மிகவும் நன்றி!
//வெற்றி"யே வந்து வாழ்த்தியாச்சு!
பிறகென்ன?!!
//
ஆஹா! பிறகென்ன வேண்டும்? இது போதும்!
//அருமையான வரிகள், ரசித்தேன் உங்கள் 'குறும்பு' கவிதையை, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete//
திவ்யா! வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
ரெம்ப நல்லா வந்திருக்கு முதல் படைப்பே.
ReplyDeleteகலக்குங்க சிபி.
யோவ், இது என்ன கலாட்டா? குறும்புன்னா எழுத எவ்வளவோ இருக்க இது என்ன கவுஜ?
ReplyDeleteஉனக்கு ஆண்டவன் எடிட் பட்டன் வைக்கவே மறந்துட்டானா? (உன்னைத் திருத்தவே முடியாது!)
ஆனா ஒண்ணு சொல்லணும். கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு.
//ரெம்ப நல்லா வந்திருக்கு முதல் படைப்பே.
ReplyDelete//
தலைப்பைக் கொடுத்த சிறில் அண்ணாச்சியே!
வருகை தந்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி!
//யோவ், இது என்ன கலாட்டா? குறும்புன்னா எழுத எவ்வளவோ இருக்க இது என்ன கவுஜ?
ReplyDeleteஉனக்கு ஆண்டவன் எடிட் பட்டன் வைக்கவே மறந்துட்டானா? (உன்னைத் திருத்தவே முடியாது!)
//
கொத்ஸ்!
இது உம்மகிட்ட இருந்து நான் எதிர்பார்த்ததுதான்!
:)
போன பதிவில் போட்ட பின்னூட்டத்தை காப்பி செய்து இலவசத்தை குறும்புன்னு மாத்தி குறும்பு செய்திருக்கிறீர்!
என்ன ஒரு அக்குறும்பு?
//ஆனா ஒண்ணு சொல்லணும். கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு.
//
ஹி.ஹி. இதுக்கு ஒரு நன்றி!
கவிதை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் வைரமுத்துவின் இதே போன்ற கவிதையின் பாதிப்பா? எனக்கு கவிதையின் தலைப்பு நியாபகம் இல்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை இதே போல் சென்று இப்படி முடியும் 'பத்து மாதம் என் வயிறு சுமந்த பிள்ளைப் பிரபஞ்சமே' என்று.
ReplyDelete//போன பதிவில் போட்ட பின்னூட்டத்தை காப்பி செய்து இலவசத்தை குறும்புன்னு மாத்தி குறும்பு செய்திருக்கிறீர்!//
ReplyDeleteதலைப்பு மாறினாலும் நீர் மாற மாட்டேன்னு அடம் பிடிச்சா எனக்கு வேலை ஈஸி. ஒரு கட் அண்ட் பேஸ்ட், ஒரு பைண்ட் அண்ட் ரீப்ளேஸ். அம்புட்டுதான்.
காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பின்னூட்டம் ஐயா நம்ம பின்னூட்டம்.
//வைரமுத்துவின் இதே போன்ற கவிதையின் பாதிப்பா? //
ReplyDeleteஉண்மைதான் நான் அவர்களே!
அக்கவிதை நானும் படித்திருக்கிறேன்!
அருமையான கவிதை!
(உங்களை வெறுமனே நான் என்று அழைக்க எப்படியோ இருக்கிறது! நான் என்றால் பிறகு சைட் டிஷ் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது)
//தலைப்பு மாறினாலும் நீர் மாற மாட்டேன்னு அடம் பிடிச்சா எனக்கு வேலை ஈஸி. ஒரு கட் அண்ட் பேஸ்ட், ஒரு பைண்ட் அண்ட் ரீப்ளேஸ். அம்புட்டுதான்.
ReplyDelete//
:))
//தலைப்பு மாறினாலும் நீர் மாற மாட்டேன்னு அடம் பிடிச்சா எனக்கு வேலை ஈஸி. ஒரு கட் அண்ட் பேஸ்ட், ஒரு பைண்ட் அண்ட் ரீப்ளேஸ். அம்புட்டுதான்.
ReplyDelete//
:))
நன்றாக இருக்கிறது குறும்பு(க்கவிதை) வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteபின்றீங்க போங்க.
ReplyDeleteநல்லா இருக்கு.
குறும்பு கவிதை அருமை. குழந்தைகளின் குறும்பு அது ரசிக்க வேண்டிய கரும்பு. வெற்றி பெற வாழத்துக்கள்.
ReplyDeleteநல்லதை விரும்பும்
ReplyDeleteநாமக்கலின் குறும்பு
கவிதைகள் எல்லாம் கரும்பு
நான் ஒரு எறும்பு
நேற்று மலர்ந்த அரும்பு
சுபா
வாழ்த்துக்கள் தள!!!
ReplyDeleteதாய்க்கு தாலாட்டு !
ReplyDeleteநல்லா இருக்கு சிபி !
:)
//நன்றாக இருக்கிறது குறும்பு(க்கவிதை) வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//
சேதுக்கரசி அவர்களே!
தங்களின் தீர்க்க தரிசன வாழ்த்திற்கு மிக்க நன்றி!
//நல்ல கவிதை வாழ்த்துக்கள்//
ReplyDeleteவி.கே.என்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
//பின்றீங்க போங்க.
ReplyDeleteநல்லா இருக்கு.//
பேட்நியூஸிண்டியா,
மிக்க நன்றி!
//குறும்பு கவிதை அருமை. குழந்தைகளின் குறும்பு அது ரசிக்க வேண்டிய கரும்பு. வெற்றி பெற வாழத்துக்கள்.
ReplyDelete//
ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி அனுசுயா!
//நல்லதை விரும்பும்
ReplyDeleteநாமக்கலின் குறும்பு
கவிதைகள் எல்லாம் கரும்பு
நான் ஒரு எறும்பு
நேற்று மலர்ந்த அரும்பு
சுபா
//
வாங்க நம்ம ஊர்க்காரரே! வருகைக்கு மிக்க நன்றி! உங்க பிளாக்ல பக்கம் முழுசா லோட் ஆக மாட்டேங்குதே!
தேவ்,
ReplyDeleteமிக்க நன்றி!
//தாய்க்கு தாலாட்டு !//
ReplyDeleteகோவியாரே!
வித்தியாசமாண கோணத்தில் பார்க்கிறீர்கள். மிக்க நன்றி!
:))
மிக்க மகிழ்ச்சி சிபியாரே. மனம் உவந்த வாழ்த்துகள்.
ReplyDeleteம்... நல்ல கவிதை வரிகள், நானும் நன்றாக ரசித்தேன் உங்கள் 'குறும்பு' கவிதை போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
ReplyDelete//மிக்க மகிழ்ச்சி சிபியாரே. மனம் உவந்த வாழ்த்துகள்//
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் குமரன்!
:))
//நல்ல கவிதை வரிகள், நானும் நன்றாக ரசித்தேன் //
ReplyDeleteரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சத்தியா!
முதல் வருகைக்கு நன்றி! மீண்டும் மீண்டும் வருக!
அட்டகாசமா எழுதறிங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்
கவிதை நல்லா வந்து இருக்கு தலை
ReplyDelete//என் இதழினில்
இச்சென்று
முத்தங்கள் பெறுவாய்!
எனக்கொன்று கேட்டால்
ஏளனம் செய்வாய்!
//
நல்ல நக்கல் இங்கே.. எப்படி தான் கவிதயில் கூட நக்கல் பண்றீங்களோ தெரியலை :))..
//அட்டகாசமா எழுதறிங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்
//
வெல்கம் பேக் கீதா!
ரொம்ப நன்றி!
//நல்ல நக்கல் இங்கே.. எப்படி தான் கவிதயில் கூட நக்கல் பண்றீங்களோ தெரியலை //
ReplyDeleteசந்தோஷ் நம்ப முதல் தொழில் நக்கல்.
உப தொழில் கவிதை.
இப்போது தெரிகிறதா?
:)
சிபி எனக்கும் அதே தான் தோணுச்சு. வசீகரா.....ஸ்னேகிதனே... ஸ்டைல்ல!!
ReplyDelete(கவிஞர் தாமரை சொந்தமா)
நல்லா இருக்கு சிபி.
//ஜியாவுதீன் has left a new comment on your post "23 : குறும்பு":
ReplyDeleteநன்றாக இருந்தது தல!
குறும்பு ஒன்றும்
குறுக்கெழுத்துப் போட்டியல்ல!
கணக்குப் பார்த்து சிரிப்பதற்கு
குறுகிய நேரத்துக் கிளர்ச்சி!
- என்னும் என்னுடைய கருத்தை உடைத்துவிட்டீர்கள். //
ஜியாவுதீன் உங்கள் பின்னூட்டம் ஏனோ பிளாக்கரில் சிக்கிக் கொண்டுவிட்டது. அதனால் நானே காப்பி செய்து இட்டுள்ளேன். மன்னிக்கவும்.
சிபி!
ReplyDeleteமிக நன்று!
வாழ்த்துக்கள்!!
யோகன் பாரிஸ்
//வசீகரா.....ஸ்னேகிதனே... ஸ்டைல்ல!!
ReplyDelete(கவிஞர் தாமரை சொந்தமா)
//
:))
//நல்லா இருக்கு சிபி. //
மிக்க நன்றி மனசு!
//நன்றாக இருந்தது தல!//
ReplyDeleteபின்னூட்டமிட்டு கருத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி ஜியாவுதீன் அவர்களே!
//மிக நன்று!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!//
ஜோஹன் அவர்களே மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்
ReplyDelete//வாழ்த்துக்கள் //
ReplyDeleteமிக்க நன்றி ஜீயா!
கவிதையும் கருவும் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
//கவிதையும் கருவும் அருமை.//
ReplyDeleteமிக்க நன்றி அருட்பெருங்கோ அவர்களே!
(50 அடித்திருக்கிறீர்கள். அதுக்கொரு ஸ்பெஷல் தேங்க்ஸ்)
தேன் துளி ஒன்று தேன் கூட்டிற்க்குச் செல்கிறது. "Advance" வாழ்த்துக்கள்
ReplyDelete//தேன் துளி ஒன்று தேன் கூட்டிற்க்குச் செல்கிறது. "Advance" வாழ்த்துக்கள்
ReplyDelete//
:) அட!
தங்களது பின்னூட்டமே ஒரு கவிதையாகத்தான் இருக்கிறது!
மிக்க நன்றி ஸயீத் அவர்களே!
மூன்றாவது கண்ணில் நான் இட்ட பின்னூட்டம்!
ReplyDelete"மிகச் சிறந்த இக்கவிதையை நீங்கள் இன்னும் சரியாகக் கவனித்திருக்கலாமோ என்பது என் எண்ணம்!
குறிப்பாக இதில் நீங்கள் எடுத்திருக்கும் அவரது கடைசி வரிகள்!
அவர் எதை எண்ணி இப்படிப் போட்டார் என்பது எனக்குத் தெரியாது.
இருப்பினும் எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன்.
//என் கரு சுமந்த என் உயிர் நீயே!//
இவ்வரிகளில் கொப்பளிக்கும் குறும்பு உங்கள் கண்களில் படவில்லையா?
"என் கரு சுமந்த"-- இந்த மூன்று சொற்களில் நான் ஒரு தாயையும், மனைவியையும், குழந்தையையும் பார்க்கிறேன்!
இவரைக் கருவாகச் சுமந்த தாய்.
தான் குடுத்த விந்துவால் தனது கருவைச் சுமக்கும் மனையாள்.
அக்கருவால் உயிர் பெற்ற குழந்தை.
இம்முன்றையும் காட்டி, எவரைப் பாராட்டுகிறார் எனக் குழம்ப வைக்கும் சொற்களல் அமைந்த குறும்பிற்கே முதல் பரிசு கொடுத்து விடலாம்!!"
விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி எஸ்.கே!
ReplyDeleteகவிதையை நன்கு உள்வாங்கி விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.
//இம்முன்றையும் காட்டி, எவரைப் பாராட்டுகிறார் எனக் குழம்ப வைக்கும் சொற்களல் அமைந்த குறும்பிற்கே முதல் பரிசு கொடுத்து விடலாம்!!"
//
இதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!
//"என் கரு சுமந்த"-- இந்த மூன்று சொற்களில் நான் ஒரு தாயையும், மனைவியையும், குழந்தையையும் பார்க்கிறேன்!
ReplyDeleteஇவரைக் கருவாகச் சுமந்த தாய்.
தான் குடுத்த விந்துவால் தனது கருவைச் சுமக்கும் மனையாள்.
அக்கருவால் உயிர் பெற்ற குழந்தை.
//
எஸ்.கே!
கவிதையை விடவும் உங்கள் விமர்சனம் மிகவும் அழகாக இருக்கிறது.
["கவிதையை விடவும்" - கவிதையைக் காட்டிலும் என்று பொருள். தாங்கள் கவிதை(எழுதுவதை)யை விடும் என்று பொருளல்ல!]
//ஆஹா!ஆஹா!!கவித கவித!!!சூப்பரூ!!!!
ReplyDelete//
தில்,
மிக்க நன்றி!
//உட்காந்து யோசிப்பியோ//
:))
//வாழ்த்துக்கள் - vaazththukkaL//
மிக்க நன்றி!
தில், ஒரு வழியா பதிவு எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கே?
ReplyDeleteபடித்த முதல கணமே-கவிதை
ReplyDeleteபடித்த முதல்கணமே
வசமில்லை என் மனமே-பர
வசமாகிப் போனேனே
குழந்தை குறும்பை ரசிக்க வைத்தாய்
மழலைப் முகத்தை நினைக்க வைத்தாய்....!
( நானும் பார்த்த முதல் நாளில் மெட்டில் சும்மா முயற்சி செய்தேன்:))
சிபி! அருமையான கவிதை.பரிசு கிடைக்கட்டும் இம்முறையும்!
ஷைலஜா
//சிபி! அருமையான கவிதை.பரிசு கிடைக்கட்டும் இம்முறையும்!
ReplyDeleteஷைலஜா //
மிக்க நன்றி ஷைலஜா!
//படித்த முதல கணமே-கவிதை
ReplyDeleteபடித்த முதல்கணமே
வசமில்லை என் மனமே-பர
வசமாகிப் போனேனே
குழந்தை குறும்பை ரசிக்க வைத்தாய்
மழலைப் முகத்தை நினைக்க வைத்தாய்....!
( நானும் பார்த்த முதல் நாளில் மெட்டில் சும்மா முயற்சி செய்தேன்:))
//
ஷைலஜா!
பாடலை அருமையாக பாட மட்டும்தான் செய்வீர்கள் என்று நினைத்தேன். நன்றாக இயற்றவும் செய்கிறீர்கள்.
முருகனருளில் நீங்கள் பாடிய இராகவன் இயற்றிய பாடலைக் கேட்டேன்.
வாவ் சிபி !!
ReplyDeleteமடியினிற் சாய்ந்து
தவிர்ப்பாய் நகர்ந்து
இச்சென்று கொடுத்து
ஏக்கம் கொடுத்து
உயிர் கொடுக்கிறது
குறும்புகள் !!
வாழ்த்துக்கள் !! தொடரட்டும் குறும்புகள் ;))
//வாழ்த்துக்கள் !! தொடரட்டும் குறும்புகள் //
ReplyDeleteமிக்க நன்றி நவீன் பிரகாஷ்!
Hello
ReplyDeleteNalla kavithai sibiyare!!!! Vetri pera vazhthukal.. Poti arambikum podhu sollunga vanthu vote pathivu panren....
Nambalala mudiyathatha mathavanga seiyum bodhu oru support kuduka vendam aduku thaan...
he he he !!!!
மிக்க நன்றி dubukudisciple!
ReplyDeleteவாவ்!! சூப்பர்-ங்க சிபி. வாழ்த்துக்கள்.
ReplyDelete// சூப்பர்-ங்க சிபி. வாழ்த்துக்கள்//
ReplyDeleteசரவ்! மிக்க நன்றி!
அப்ப கவிஞரா நீங்க?
ReplyDeleteஅய்யய்யோ! இது தெரியாம தடாலடிப் போட்டில உங்கக்கூடப் போட்டிப் போட்டுடன்னே?
படு சோக்கா இருந்துச்சு உங்க கவிதை. போட்டிக்கு வாழ்த்துக்கள்.
//அப்ப கவிஞரா நீங்க?
ReplyDeleteஅய்யய்யோ! இது தெரியாம தடாலடிப் போட்டில உங்கக்கூடப் போட்டிப் போட்டுடன்னே?
//
ஜி! நிறைய பேர் பங்கேற்கும்போதுதான் போட்டிகள் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்! :))
கவிஞர் என்றால் போட்டிக்கு வர மாட்டீர்களா என்ன? உங்களிடம் அருமையான கற்பனைத்திறனும், டைமிங்க் சென்ஸும் வைத்துக்கொண்டு போட்டியிடாமல் விட்டால் நல்ல கமெண்டுகள் கண்ணிலேயே படாமல் போய்விடுமே!
//படு சோக்கா இருந்துச்சு உங்க கவிதை. போட்டிக்கு வாழ்த்துக்கள். //
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஜி!
Congrats Sibi,
ReplyDeleteYou won the 2nd prize.
வெற்றிக்கு வாழ்த்து சிபி!
ReplyDeleteபுத்தாண்டில் மேலும் பலபரிசுகளை வெல்க!
ஷைலஜா
வாழ்த்துக்கள் சிபி...
ReplyDelete2007லையும் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்...
நாமக்கல் சிபி அவர்களே
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இதழ் முத்தம் பெற்று ஏளனம் செய்த குறும்பு... கரும்பு...
குறும்பு செய்தது ஒரு அரும்பு...
உமது இக்குறும்பே அனைவரின் விருப்பு..
மனம் கவர்ந்த இக்குறும்பு பரிசையும் கவர்ந்தது.
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்//
ReplyDeleteபோட்டி எப்போதென்று தெரியாமல், போன மாதமே வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று பின்னூட்டமிட்டிருந்தேன். அது இப்போது உண்மையாகிவிட்டதே :-) வாழ்த்துக்கள் (மீண்டும்!)
சிபி, வாழ்த்துகள்!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள். 2007ல் மரபில் கொஞ்சம் முயற்சி செய்வீர்களாக!!
போட்டி வெற்றிக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டுக்கும் என் வாழ்த்துக்கள்
இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். புத்தாண்டில் இனிய செய்தி.
ReplyDeleteதள,
ReplyDeleteபோட்டியிலே வென்றதுக்கு வாழ்த்துக்கள்.
மிக அழகான கவிதை!! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்!! :-)