Friday, December 01, 2006

நிம்மதியாய் வாழ...!


சமாதானப்
புறாக்கள்
இப்போதுதான்
சளைக்காமல்
பறக்க வேண்டும்..!

இறக்கை
ஓய்ந்ததென்று
அவை
இளைப்பாற
அமர்ந்துவிட்டால்
மனித நேயங்கள்
இங்கு
மரிக்கத் துவங்கி விடும்.

கண்ணீர் விட்டுக்
கண்ணீர் விட்டே
தண்ணீர் தேசமாகிப்
போனது
எங்கள் பூமி...!

நாங்கள்
நிம்மதியாய்
உறங்க முடிவது
மயானத்தில்
மட்டும்தானா?


மீண்டுமொருமுறை
வேண்டாம் - இங்கு
வேட்டுச் சத்தங்கள்..!

நிசப்தங்களுடனேயே
நாங்கள்
நிம்மதியாய்
இருந்துவிட்டுப்
போகிறோம்...!

(இது ஒரு மீள் பதிவு - ஜனவரி 21 2006 ல் பதிவிடப்பட்டது)

22 comments:

 1. நிசப்தங்கள் போதாது சிபி சத்தியமான உள்ளங்கள் வேண்டும் ....

  - அன்புடன் இளந்திரையன்

  ReplyDelete
 2. ஒவ்வொரு முறை சண்டையின்போதும்
  உறவுகளையும், உடமைகளையும் இழந்து இடம்பெயரும் அப்பவி மக்களுக்கான முதல் தேவை நிம்மதி மட்டுமே.

  ReplyDelete
 3. \"நாங்கள்
  நிம்மதியாய்
  உறங்க முடிவது
  மயானத்தில்
  மட்டும்தானா?\"

  நெஞ்சை உலுக்கும் வரிகள்.

  ReplyDelete
 4. ஃபோட்டோ மாற்றம் கவனிக்கபட்டது......கலக்கல்ஸ் சிபி!

  ReplyDelete
 5. //ஃபோட்டோ மாற்றம் கவனிக்கபட்டது......கலக்கல்ஸ் சிபி!
  //

  இதையெல்லாமா கவனிக்கிறீர்கள்!

  ReplyDelete
 6. //நெஞ்சை உலுக்கும் வரிகள்.//

  உண்மைதான் திவ்யா! அந்த மக்களின் வேதனை இதனினும் அதிகம்!

  :(

  ReplyDelete
 7. சிபி, பூனையின் பின்னழகு அருமை!

  போஃட்டோ மாத்துறீங்க, template மாத்துறீங்க, என்ன ஸ்பேஷல் சிபி???

  ReplyDelete
 8. //சிபி, பூனையின் பின்னழகு அருமை!
  //

  நன்றி!

  //போஃட்டோ மாத்துறீங்க//

  ஃபோட்டோ மாத்தி ரொம்ப நாள் ஆச்சுங்க! இது மீள் பதிவு! பழைய பின்னூட்டத்தின் தேதியைப் பாருங்க!

  ReplyDelete
 9. டெம்பிளேட் மாற்றங்கள் செய்து அலைன்மெண்டை ஜஸ்டிபைடாகச் செய்து, நெருப்பு நரியில் பதிவுகள் தெரியாமல் செய்த நாமக்கல்லாருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 10. ம்ம்ம் நிசப்தங்கள் இல்லாவிட்டாலும் நிம்மதியான வாழ்க்கை இருந்தால் கூடப் போதுமே... :(

  கனமான கவிதையை இட்டு அதில் ஆழ்ந்து போக முடியாமல் அழகான பூனையை வேறு போட்டு என்னை உணர்ச்சிகளில் திணற அடித்த சிபிக்கு கண்டனங்கள்..
  ஆமாம், இந்தப் பூனையை நாடோடி பார்த்தாச்சா?

  ReplyDelete
 11. //டெம்பிளேட் மாற்றங்கள் செய்து அலைன்மெண்டை ஜஸ்டிபைடாகச் செய்து, நெருப்பு நரியில் பதிவுகள் தெரியாமல் செய்த நாமக்கல்லாருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  //

  கொத்ஸ்,
  தொழில்நுட்ப உதவியை நாடியிருக்கிறேன். முடிந்தவரை விரைவில் ஆவண செய்கிறேன்.

  ReplyDelete
 12. //கனமான கவிதையை இட்டு அதில் ஆழ்ந்து போக முடியாமல் அழகான பூனையை வேறு போட்டு என்னை உணர்ச்சிகளில் திணற அடித்த சிபிக்கு கண்டனங்கள்..
  //

  என்ன இது தொடர்ந்து இரண்டாவது கண்டனம் வேற!


  டெம்பிளேட்டையும், கவிதையையும் ஒருசேர ஒரே வாக்கியத்தில் பாராட்டிய பொன்ஸ் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 13. ///
  நிசப்தங்களுடனேயே
  நாங்கள்
  நிம்மதியாய்
  இருந்துவிட்டுப்
  போகிறோம்...!
  ///

  நெஞ்சைத்தொடும் வரிகள் !!!

  ReplyDelete
 14. //arumai //

  மிக்க நன்றி ஜீயா! (ஜியாவுதீன்!?)

  ReplyDelete
 15. //நெஞ்சைத்தொடும் வரிகள் !!! //

  உண்மைதான் செந்தழலாரே! நிம்மதியான வாழ்வை என்று காணப்போகிறோமோ என்ற அவர்களின் ஏக்கத்தைத்தான் காட்ட முனைந்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. //இறக்கை
  ஓய்ந்ததென்று
  அவை
  இளைப்பாற
  அமர்ந்துவிட்டால்
  மனித நேயங்கள்
  இங்கு
  மரிக்கத் துவங்கி விடும்//

  இனிமேல்தான் தானா...ஹ்ம்ம்ம்...

  அருமையா இருக்கு சிபி அவர்களே...

  ReplyDelete
 17. //இனிமேல்தான் தானா...ஹ்ம்ம்ம்...

  அருமையா இருக்கு சிபி அவர்களே...//

  நன்றி மங்கை அவர்களே! பல காலமாக நடப்பதுதான்! அவ்வப்போது போர் நிறுத்தங்களும், பிறகு மீண்டும் போர்ப்பிரகடனங்களும் எழுந்து கொண்டிருந்த நிலையில் என் எண்ணத்தில் தோன்றியவை இந்த வரிகள்!

  ReplyDelete
 18. //கொத்ஸ்,
  தொழில்நுட்ப உதவியை நாடியிருக்கிறேன். முடிந்தவரை விரைவில் ஆவண செய்கிறேன்.
  //

  கொத்ஸ்,
  இப்போது மாற்றங்களைச் செய்திருக்கிறேன். சரியாகத் தெரிகிறதா என்று பாருங்கள்!

  ReplyDelete
 19. kalakkareengalae sibi

  ReplyDelete
 20. //kalakkareengalae sibi //

  கிட்டு,
  மிக்க நன்றி!

  ReplyDelete
 21. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

  இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

  இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete