கருவின் உள்ளிருந்தே
நான் கத்தியிருப்பேன்
என்று தோன்றவில்லையா?
உனக்குள்ளேதானே
இருந்து வந்தேன்!
என் வலியை நீ
உணர வில்லையா?
பெற்றெடுத்துப் போட்டிருந்தால்
ஒரு நாளேனும்
நீயும் என் உயிர்தானடி
என்று உச்சிமுகர்ந்து
கொஞ்சியிருப்பாயோ!
பெரிய மனுஷியானதும்
கன்னங்களில் சந்தனம்பூசி
நெட்டிமுறித்துப்
போட்டிருப்பாயோ!
மாமியார் வீடு செல்கையில்
என் முகம் சாய்த்து
அழுவதற்கு உன்
தோள்கள் தந்திருப்பாயோ!
சந்தோஷமாக இருக்கிறாயா?
எத்தனை மாசமென்று
என் கணவரும் அறியாமல்
என்னைக் கேட்டிருப்பாயோ!
அம்மா! உன்
வயிற்றிலிருந்து நான்
உயிரோடு வரக்கூடாதென்று
சாபம் வாங்கி வந்தேனோ?
கருவறையே
கல்லறையாகும்!
அல்லது
குப்பைத்தொட்டியே
சேலைத்தொட்டிலாகும்!
பெண்ணாக உருவாகும்
எங்களுக்கு
மட்டும் ஏன் இப்படி?
உந்தியது : ஏன்? - வெட்டிப் பயல்
---பெண்ணாக உருவாகும்
ReplyDeleteஎங்களுக்கு
மட்டும் ஏன் இப்படி?---
படித்தவுடன் எழுந்த வினாக்கள்:
1. ஆணாக இருந்தால் ஒகேவா?
2. ஏற்கனவே, நாலைந்து பிறந்த ஏழைக் குடும்பத்தில், தவறுதலாக உதித்திருந்தாலும் , வதவதவென்று பத்தோடு பதினொன்றாக இதுவும் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டுமா?
3. கருத்தடை செய்திருந்தும், தேவையில்லாமல் உண்டாவதை (இன்றைய செய்தி: Surprise Chimp Born at La. Sanctuary) கருக்கலைப்பு செய்வதும் தவறா?
//ஆணாக இருந்தால் ஒகேவா? //
ReplyDeleteஅப்படியல்ல பாஸ்டன் பாலா அவர்களே! ஆணாக இருந்தால் கருக்கலைப்பு செய்ய அவ்வளவு சீக்கிரம் முன் வருவதில்லை! தத்துக் கொடுத்தால் நிறைய பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள நிறைய பேர் உண்டு!
பெண் குழந்தைகளுக்கே இது அதிகம் நேரிடுகிறது என்பது வேதனையான உண்மை!
//2. ஏற்கனவே, நாலைந்து பிறந்த ஏழைக் குடும்பத்தில், தவறுதலாக உதித்திருந்தாலும் , வதவதவென்று பத்தோடு பதினொன்றாக இதுவும் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டுமா?
//
கரு உருவாகும் முன் போதிய கருத்தடை மருந்துகளை உட்கொள்ளலாம் அல்லவா? அதைவிடுத்து ஒரு கரு உருவானபின் அதை அழிக்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கொடிய செயலாகவே தோன்றுகிறது!
//3. கருத்தடை செய்திருந்தும், தேவையில்லாமல் உண்டாவதை (இன்றைய செய்தி: Surprise Chimp Born at La. Sanctuary) கருக்கலைப்பு செய்வதும் தவறா?
//
அப்படிப்பட்ட குழந்தைகளை ஏதேனும் காப்பகங்களில் சேர்த்துவிடலாமே!
தேவையில்லாம ஏன் அவற்றைக் கொல்ல வேண்டும்?
உங்கள் எண்ணம் சூப்பர்.
ReplyDeleteஅதெப்படி, சட்டுபுட்டுனு கவிதை எழுதிடறீங்க?!
எனக்கு வந்த உங்க பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்தாலும், தமிழ்மணத்துல மறுமொழியப்பட்ட பதிவுகள்ல வரலையே, என்ன செய்யணும்?
//உங்கள் எண்ணம் சூப்பர்.
ReplyDeleteஅதெப்படி, சட்டுபுட்டுனு கவிதை எழுதிடறீங்க?!
//
வாங்க வாசகன்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//எனக்கு வந்த உங்க பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்தாலும், தமிழ்மணத்துல மறுமொழியப்பட்ட பதிவுகள்ல வரலையே, என்ன செய்யணும்?
//
அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டியலில் உங்கள் பதிவும் இடம்பெற இரண்டு வழிமுறகளை நீங்கள் செய்ய வேண்டும்.
1. உங்கள் பதிவில் மறுமொழி மட்டுறுத்தல் செயல்படுத்தப் பட வேண்டும். (Enabling Comment Moderation)
2. அதைச் செயற்படுத்தியவுடன் தமிழ்மணத்தின் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டை அறிவிக்க என்னும் இந்த தமிழ்மணத்தின் வலைப்பூ பதிவிலும் நீங்கள் உங்கள் வலைப்பூவின் யூ.ஆர்.எல் ஐ பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டும்!
நீ கேட்ட அத்தனையும்
ReplyDeleteநானும் கேட்டேனடி
என்னுள்ளே!
நான் பட்ட பாட்டினை
நீயும் படவேண்டாமெனவே
கருவிலேயே உன்னைக்
கலைத்தேனடி!
உச்சி முகர்ந்து கொஞ்ச
இச்சை இருந்த போதும்
எச்சில் என உனைப் பேசும்
பொச்சருக்கு பயந்தேனடி!
நெட்டி முறித்துப் போடவே
நித்தமும் ஆசை இருக்குதடி
தோள்கள் தந்திடவே என்னுள்
பாசம் இருக்குதடி!
காதலை மதிக்காமல்
காமத்தை நினைந்துவிட்டு
மானத்தைத் தொலைத்தேனடி
காமுகன் ஒருவனால்!
என்னைக் கெடுத்த பின்னர்
அடுத்தவளைத் தேடி
அவன் போய்விட்டான்
இங்கே நான் சுமக்கிறேன்!
எப்படி உன்னை வெளிக்கொணர்வேன்
அப்படியென ஓய்ந்து போனேன்
எப்படியோ இது தெரிவதற்குள்
அப்படியே அழிப்பதே வழி!
நீ யாரென்றே தெரிந்தது
உன்னை பதிவிட்ட பின்னரே!
பெற்றவர்க்குத் தெரிந்ததால்
குற்றமெனத் தொலைத்துவிட்டார்!
உடல்கள் அழியுமாம்!
உயிர்கள் ஓய்வதில்லையாம்
கற்றவர் சொல்லுகின்றார்- எனவே
பெற்றவள் உனைத் துறந்தேன்!
என்றேனும் ஓர்நாள் உனை
எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்
பட்டென்று ஒற் அறை
என் முகத்தில் அறைந்துவிடு!
அதுவரையில் என் மகளே
கருவறையில் நீ வேண்டாம்
கண்கலங்கி நிற்கின்றேன்
உன்னுடன் நானும்!
நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!
தள,
ReplyDeleteஅருமையா எழுதியிருக்கீங்க...
பாபா,
1. தப்பு தான்.
பெண்ணிற்கே பெரும்பாலும் நடக்கிறது.
2. ஏற்கனவே நான்கு பிள்ளை இருக்கும் குடும்பத்தில் ஐந்தாவது ஒரு பிள்ளை பிறந்தால் கொல்லலாமா? (பிறந்த பிறகு)
3. தவறே!!! (It might be an accident but they r also responsible for it)
இன்னும் நடக்கும் இந்த அவலம் குப்பை தொட்டியில் போய் சேரட்டும்..
ReplyDeleteஇத்தனை ஆண்டுகளாய் நடக்கும் இந்த 'கொடுமை கிழவி'க்கு இறப்பு வராதோ, இப்படி பூக்கின்ற சிசுக்களை முகிழ்க்கும் முன்னே முறித்துப் போடத்தான் காட்டுமிராண்டி அரக்கனுக்கு கூட மனசு வராதே..
அருமையான கவிதைங்க சிபி..
சிபி,
ReplyDeleteமனதைக் கனக்க வைத்த கவிதை.இந்தியாவில் பல பகுதிகளில் இன்றும் பல பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றது என அண்மையில் BBC யில் படித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. (:
வாங்க எஸ்.கே!
ReplyDeleteதாயோட பார்வையில இருந்து மறுப்பு சொல்லி இருக்கீங்க!
கருக்கலைப்பு தவறுதான் என்றாலும் அப்பெண்ணின் சூழ்நிலை அப்படி என்று சொல்கிறீர்கள்!
கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி வெட்டிப்பயல் அவர்களே!
ReplyDelete//இத்தனை ஆண்டுகளாய் நடக்கும் இந்த 'கொடுமை கிழவி'க்கு இறப்பு வராதோ, இப்படி பூக்கின்ற சிசுக்களை முகிழ்க்கும் முன்னே முறித்துப் போடத்தான் காட்டுமிராண்டி அரக்கனுக்கு கூட மனசு வராதே..
ReplyDelete//
ஆமாங்க கார்த்திகேயன்!
//
அருமையான கவிதைங்க சிபி..
//
மிகவும் நன்றி.
//மனதைக் கனக்க வைத்த கவிதை.இந்தியாவில் பல பகுதிகளில் இன்றும் பல பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றது என அண்மையில் BBC யில் படித்தேன். //
ReplyDeleteநாகரிகம், விஞ்ஞானம் என எவ்வளவோ வளர்ந்தாலும் இப்படியும் நடந்து கொண்டிருக்கிறது! இந்தக் காட்டுமிராண்டித் தனமும் இருந்துகொண்டுதானிருக்கிறது.
:(
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெற்றி அவர்களே!
//உனக்குள்ளேதானே
ReplyDeleteஇருந்து வந்தேன்!
என் வலியை நீ
உணர வில்லையா?//
சிபி உணர்வு பொதிந்த வரிகள். கருக்கொலை பற்றிய அருமையான கவிதை... படித்ததும் நெருடலாக இருந்தது.
அருமையா இருக்கு....அனைத்தும் உணர்வு பூர்வமான வருகள்
ReplyDelete//சிபி உணர்வு பொதிந்த வரிகள். கருக்கொலை பற்றிய அருமையான கவிதை... படித்ததும் நெருடலாக இருந்தது//
ReplyDeleteகோவியாரே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//அருமையா இருக்கு....அனைத்தும் உணர்வு பூர்வமான வருகள் //
ReplyDeleteமங்கை! மிக்க நன்றி!
ஏக்கம் அருமை சிபி ! :))
ReplyDeleteHello!
ReplyDeleteThis poem is very good. I taste fo all teh wirting in INDIAN. I know some INDU, but I do not have keyboard to write.
I am portuguese, but my poem today is write in espanhol.
Tank you
சிபி அருமையான வரிகள், ஆனா இப்பவும் நடக்குதான்னு தெரியல. எங்க பக்கத்து வீட்டுல.. முதல் குழந்தை ஆண், 2வது குழந்தை பெண் ஆக இருக்க வேண்டும் எதிர்பார்த்து ஸ்கேன் எடுத்து அது என்ன குழந்தை என்று அந்த கணவனுக்கு தெரிந்து மறைத்து விட்டார். காரணம் ஆண் குழந்தையே அடுத்ததும். தெரிந்தால அந்த பெண் மன சோர்வு அடைந்து விடுவார்கள் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு நல்லது அல்ல என்று.. குழந்தை பிறந்தவுடன் தான் அவர் தன் மனைவியிடம் தனக்கு முன்னமே தெரியும் என்பதை சொன்னார். இதில் கூத்து என்னவென்றால் அந்த பெண், பெண்குழந்தைக்கான நிறைய உடைகள் வாங்கி சேமித்து வைத்து இருந்தார்..
ReplyDeleteகருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கவிதா!
ReplyDeleteசிபி,
ReplyDeleteசிபி சக்கரவரத்தி நீ
கவி சக்கரவர்த்தி வெட்டியின்
உணர்வுகளை உள்வாங்கி உன்
உணர்ச்சி ஊற்றில் கவி எனும்
களமிறங்கி கருவிலேயே கருகிய
கண்மணிகளின் கருத்தோவியமிது
//கவி சக்கரவர்த்தி வெட்டியின்
ReplyDeleteஉணர்வுகளை உள்வாங்கி உன்
உணர்ச்சி ஊற்றில் கவி எனும்
களமிறங்கி கருவிலேயே கருகிய
கண்மணிகளின் கருத்தோவியமிது //
மிக்க நன்றி உலகம் சுற்றும் வாலிபி மேடம்!
நல்ல பதிவு...எவளோ வளை பதிவுகள் எப்படி நேரம் உங்களுக்கு இருக்கு...ஆனால் அனைத்து வளை பதிவுகளும் நன்றாக இருந்தது
ReplyDelete//நல்ல பதிவு...எவளோ வளை பதிவுகள் எப்படி நேரம் உங்களுக்கு இருக்கு...ஆனால் அனைத்து வளை பதிவுகளும் நன்றாக இருந்தது//
ReplyDeleteமிக்க நன்றி வள்ளி!
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
ReplyDelete