Wednesday, October 22, 2008

ஈழத்தமிழன் - எம்மினத்தவனே! (1)

வீழ்பவன் அங்கே!
எம்மினத்தவனே!
மாள்பவன் அங்கே!
எம்மினத்தவனே!

ஆயுதம் கொடுத்தவன்
எவனெனக் கண்டால்
ஐயஹோ கொடுமை!
அவனோ எம்மிடத்தவனே!

ஐய்யோ! ஐய்யோ!
பாதகம் புரிந்தோம்!
இனியும் வேண்டாம்!
நிறுத்துக உதவியை!

அகதியாய் வந்தால்
அவலமாய் வாழ்வு!
சிங்கள வீரர்க்கு
சிறப்புப் பயிற்சிகள்!

என்னே கொடுமை!
என்னே விந்தை!
நம்மினத்தவர்க்கே
நாமிழைத்த கொடுமை!

ஐய்யோ! ஐய்யோ!
பாதகம் புரிந்தோம்!
இனியும் வேண்டாம்!
நிறுத்துக உதவியை!

எங்கள் உறவுகள்
உதிர்க்கும் உதிரம்!
இனியும் பொறுத்திட - எம்
இதயமும் வெடித்திடும்!

அரசுகள் முயன்றே
அமைதியைக் காப்பீர்!
எம் உறவுகள்
பிழைக்க
அவர்தம்
உரிமைகள் உடைமைகள்
அனைத்தையும் காக்க
எம் குரல் ஒலிக்கும்!
நித்தமும் இங்கே!

இவ்வொரு குரலோசை
ஓய்ந்து போகலாம்!
எம் உயிர்களின்
ஓசை
தேய்ந்திடலாமோ!
தமிழரின் ஓசை
தாழ்ந்திடலாமோ!

விரைவில் ஒலிக்கும்!
வெற்றியின் முரசு!
எம் தமிழினம்
ஜெயிக்கும்!
படைத்திடும் அரசு!

16 comments:

 1. //விரைவில் ஒலிக்கும்!
  வெற்றியின் முரசு!
  எம் தமிழினம்
  ஜெயிக்கும்!
  படைத்திடும் அரசு!//

  வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 2. நன்றி குடுகுடுப்பை!

  ஜாமத்துலே வந்து குடுகுடுப்பை சொன்னா பலிக்கும்னு சொல்லுவாங்க!

  நிச்சயமா

  விரைவில் ஒலிக்கும்!
  வெற்றியின் முரசு!
  எம் தமிழினம்
  ஜெயிக்கும்!
  படைத்திடும் அரசு!

  ReplyDelete
 3. ஈழ தமிழனின் நிலையை விளக்கும் நல்ல கவிதை

  ReplyDelete
 4. //ஈழ தமிழனின் நிலையை விளக்கும் நல்ல கவிதை//

  நன்றி நசரேயன்!

  ReplyDelete
 5. //விரைவில் ஒலிக்கும்!
  வெற்றியின் முரசு!
  எம் தமிழினம்
  ஜெயிக்கும்!
  படைத்திடும் அரசு!
  //

  Wellsaid!

  ReplyDelete
 6. நம்பிக்கையாக உள்ளது...

  ReplyDelete
 7. உணர்வைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 8. //விரைவில் ஒலிக்கும்!
  வெற்றியின் முரசு!
  எம் தமிழினம்
  ஜெயிக்கும்!
  படைத்திடும் அரசு!///

  நிச்சயமாக படைத்திடும் புதிய சகாப்தம்.
  ஆதங்கத்தின் வெளிப்பாடு அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. போண்டா அய்யங்கார் இனம் இருக்கும் வரை வெற்றிமுரசாவது?

  சாவுமுரசு கேட்டால்தான் அவாளுக்கு சாணியே இறங்கும்.

  தமிழினப் பார்ப்பனர் கருணாநிதி இருக்கும் வரை தமிழினம் ஜெயிக்குமா?

  ReplyDelete
 10. தம்பியின் போராட்டம்
  தமிழரின் விடுதலை.
  தம்பிக்கு உதவா
  தமிழனும் தமிழனா?
  ஆரிய மாயையில்
  அடிமையாய் வாழும்
  பதவிப் பித்தர்கள்
  புரிந்திட உரைத்தீர்!

  ReplyDelete
 11. அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்

  தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை
  ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.

  நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.
  நன்றி.  SLA shelling targets densely populated Vanni regions
  Uploaded by spyglass8
  மேலதிக தகவல்களுக்கு
  முரசுமோட்டை மக்கள் குடியிருப்பில் சிறிலங்கா வான் படை தாக்குதல் 31.12.2008 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=91
  முரசுமோட்டை-வெளிக்கண்டல் சிறிலங்கா வான் படை தாக்குதல் 01.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=92
  முரசுமோட்டை ஏறிகனைத்தாக்குதல் 02.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=93
  வட்டக்கச்சி,தருமபுரம் பகுதிகளில் எறிகணைத்தாக்குதல் 08.01.2009 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=102
  முல்லைத்தீவு தேரா மேற்குப்பகுதி ஏறிகனைத்தாக்குதல் 11.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=103
  http://www.pulikalinkural.com/

  ReplyDelete
 12. //சிபி? //


  ஆட்காட்டி என்ன கேட்கிறீங்க?

  ReplyDelete
 13. pls visit and give ur feedback

  http://www.peacetrain.blogspot.com/

  ReplyDelete
 14. engalukku avalangalai thanthavarkal evaraayiruppinum avarkalukku avalam thiruppikkodukkappadum kaalam vegu viraivil...-raavan rajhkumar-jaffna

  ReplyDelete