Tuesday, June 23, 2009

சாபங்கள் பலிக்கட்டும்.........!

உங்கள் வீட்டுப் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில்
போடட்டும்
என்று சொன்னதற்கே
துள்ளியெழுந்து வந்து
துடித்து வந்து
கேள்வி கேட்கும்
கணவான்களே!
அங்கே எங்கள்
வீட்டுப் பெண்கள்
துகிலுரிக்கப் பட்டு
துறத்தித் துறத்திக்
கற்பு சூறையாடப் பட்டபோது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

எவளுக்கோ நடக்கிறது!
நமக்கென்ன என்றுதானே!
இன்று அந்நிலை
நம் வீட்டுப் பெண்களுக்கும்
வந்திடுமோ
என்ற அச்சம்
உங்களுக்கேன் வந்தது?

பாவத்தில் பங்குபெற்றோர்க்குத்தானே
சாபங்கள் பலிக்கக் கூடும்?
மடியினில் கனமில்லாமல்
மனதினிலேன் பயம் கொண்டீர்?

உள்ளுக்குள் உறைக்கின்றதென்றால்
நம் நாடிழைத்த
கேட்டில் நீரும்
பங்கு பெற்றீரா?
அல்லது
எம்மவர்க்கு நேர்ந்த
கொடுமை கண்டு
கைகொட்டி ரசித்தீரா?

சாபம் கண்டு
உமக்கென்ன பயம் வந்தது?
பாவம் செய்தது உண்மையெனில்
சாபத்தின் பலனை
தின்றுதானே ஆகவேண்டும்!

நரமாமிசம் புசித்தவர்களைக்
காக்கத்தானே
ஐநா சபையினிலும்
ஆதரித்துப் பேசுகின்றீர்!
இரக்கமற்ற இந்தியா
இருந்தாலென்ன
அழிந்தால்தான் என்ன?

அந்நிய நாட்டுப்
பிரச்சினையில்
தலையிடுதல் நடவாதென்று
சொல்லிக் கொண்டுதானே
உளவுக் கருவிகளும்
வக்கணையாய்
ஆயுத உதவிகளும்
செய்து முடித்தீர்!

செத்து மடிந்த
எங்கள் அண்ணன்மாரின்
ஆவிகள்
உங்களைச் சும்மா விட்டுவிடுமா?
கதறியழுதத் தாய்மார்கள்
சார்பில்தானே
தாமரையும்
சாபம் விடுத்தார்!

தவறிழுத்தோர்தானே
அஞ்ச வேண்டும்?
சாப விமோச்சனம்
தேட வேண்டும்?

சாபம் விடுத்தல்
தவறென்று
தடியெடுத்து வந்த
தைரிய சாலிகளே!
உங்கள் துள்ளல்தானே
நிரூபிக்கிறது
பாவத்தில் உங்களுக்கும்
பங்கு உண்டு என்பதனை?

ஏ பாரதமே!
எம்மினத்திற்கெதிராக
நீ தவறிழைத்தது
நிஜமென்றால்
அக்கருஞ்சாபம் பலிக்கட்டும்!
பாரத மாதா
ஒரு
பத்தினி அல்லவென்று
பாரோர் தூற்றட்டும்!

21 comments:

  1. //சாபம் விடுத்தல்
    தவறென்று
    தடியெடுத்து வந்த
    தைரிய சாலிகளே!
    உங்கள் துள்ளல்தானே
    நிரூபிக்கிறது
    பாவத்தில் உங்களுக்கும்
    பங்கு உண்டு என்பதனை?//
    நிதர்சனமான உண்மை.... தமிழன் வீரன் என்ற காலம் மாறிப்போய்விட்டது...... இந்திய மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் பேடிகளாய் மாறிவிட்டோம்.... சக மனிதன் துடி துடித்து சாவதை வேடிக்கை பார்க்கும் ஜடங்களாய் மாறிவிட்டோம்... என் கோபத்தையும் இதில் பதிவு செய்திருக்கிறேன்.... என்னால் செய்யமுடிந்தது (அல்லது செய்யமுடியும் என நான் நினைத்தது) இது மட்டுமே.... நானும் கோழையாய் இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்...........
    http://nilamagal-nila.blogspot.com/2009/03/blog-post_16.html

    ReplyDelete
  2. நிலா மகள், வெண்காட்ட்ன்

    உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. உங்களின் இதே உணர்வு தான் எனக்கும்....

    ReplyDelete
  4. கவிஞர் தாமரையின் சாபக் கவிதைக்கு தங்களின் விளக்கமும் நன்று!

    அறிந்தே பாவம் செய்தவர்கள் அணைவரையும் அச் சாபம் துரத்தித் துரத்தி தூக்கம் கலைக்கட்டும்.

    ReplyDelete
  5. //மடியினில் கனமில்லாமல்
    மனதினிலேன் பயம் கொண்டீர்?//

    அதானே !

    நெஞ்சு பொறுக்குதில்லையே சகோதரா!:(

    ReplyDelete
  6. உண்மைக்கும் விளக்கம் தேவைப்படுகிறது.

    உங்களின் உணர்விற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  7. நன்றி நாமக்கல்லாரே!
    நாமக் கல்லாருக்குக் கூட கருணை இருக்கிறது!
    பெயரில் என்ன இருக்கிறது!?
    ஒன்றும் இல்லை என்பது நிதர்சனம்

    ReplyDelete
  8. உண்மையான வரிகள்.

    குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்க வேண்டும்.

    தவறை தட்டி கேட்க நீங்கள் தமிழனாக இருக்கவேண்டாம்.மனிதனாய் இருந்தால் போதும்.

    ReplyDelete
  9. //சாபம் கண்டு
    உமக்கென்ன பயம் வந்தது?
    பாவம் செய்தது உண்மையெனில்
    சாபத்தின் பலனை
    தின்றுதானே ஆகவேண்டும்!//

    கட்டாயம் பாவத்தின் பலனை அனுபவிக்க நேரிடும்,அற்ப அரசியல் செய்த கேடு கெட்டவர்கள் :((

    ReplyDelete
  10. உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  11. thamizhanaaha iruppatharkku thadai endraal inthiyaNAAY iruppathai marupariseelanai seyven....(thamizhanbhan)

    ReplyDelete
  12. கடைசி பத்தி கோவத்தின் உச்சம்....

    அரசியல் சாக்கடையில் நாம் ஆத்மாக்களை தேடுகிறோம்...

    நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்... நெஞ்சுப் பொருக்குதில்லையே.....

    ReplyDelete
  13. // thamizhanaaha iruppatharkku thadai endraal inthiyaNAAY iruppathai marupariseelanai seyven....(thamizhanbhan)
    //

    மானங்கெட்டுப் போய் இந்தியநாய் இருப்பது கேவலம் என்று ஏற்கனவே அக்கோவணத்தை அவிழ்த்தெறிந்துவிட்டேன் அனானி நண்பரே!

    ReplyDelete
  14. சாபத்தின் இலக்கணம் நன்றாகவே இருக்கிறது.கவிதை என்போருக்கு அது கவிதை.சாஸ்திரம்,ஊழ்வினை நம்புவோருக்கு அது சாபமே.ஒரு சமூக கோபத்தின் வெளிப்பாடு என்பது எழுத்தாவதால் அது எழுத்து நயமே.நிகழ்வில் சொல்லாத கோபமே உயிர் கொல்கிறது.வஞ்சகத்திற்கு துணை போகிறது.எனவே அறச்சீற்றம் என்ற கவிதையின் இலக்கியத்தொகுப்புக்குள் கவிஞர் தாமரையின் கவிதை வலம் வரட்டும்.

    ReplyDelete
  15. India/Indian congress government will pay a huge price for commiting genocide in srilanka.

    ReplyDelete
  16. பொறுக்க முடியா கோபக்கனல் இக்கவிதை வரிகளிக்குள்..

    //செத்து மடிந்த
    எங்கள் அண்ணன்மாரின்
    ஆவிகள்
    உங்களைச் சும்மா விட்டுவிடுமா?
    கதறியழுதத் தாய்மார்கள்
    சார்பில்தானே
    தாமரையும்
    சாபம் விடுத்தார்!
    //

    தாமரையின் கவிதை ,சில சர்ச்சைகுள் இருக்கிறதே...என்ன சொல்ல...

    ReplyDelete
  17. //தாமரையின் கவிதை ,சில சர்ச்சைகுள் இருக்கிறதே...என்ன சொல்ல...//

    அந்த சர்ச்சைக்குள் எழுந்ததுதான் இக்கவிதை! முதல் வருகைக்கு நன்றி ராஜி!

    ReplyDelete
  18. inruthaan ungal thalam paarkkiren.mikavum sirappu.ungal unarvukalukku kanneer kalantha nanrikal.engalukkaaga thodarnthu kathaiyungal sotharaa...!-raavan rajhkumar-jaffna

    ReplyDelete
  19. //inruthaan ungal thalam paarkkiren.mikavum sirappu.ungal unarvukalukku kanneer kalantha nanrikal.engalukkaaga thodarnthu kathaiyungal sotharaa...!-raavan rajhkumar-jaffna//

    raavan rajhkumar,
    மிக்க நன்றி!
    எங்கள் ஆதரவும், பிரார்த்தைனகளும், ஆதரவுக் குரல்களும் உங்களுக்காக எப்பொழுதும் உண்டு!
    நீங்கள் எங்கள் உறவுகள் அல்லவா!

    ReplyDelete
  20. உங்கள் விளக்கம் அருமை!
    நல்ல சிந்தனை தொடருங்கள் தோழரே!

    ReplyDelete