Saturday, February 14, 2009

நீ, நான் மற்றும் நம் காதல்


நமக்காகக் காதலா
காதலுக்காக நம்மையா
எப்படிப் படைத்தான்
இறைவன்?
எப்படி இருந்தாலும்
நமக்காகக் காதலும்
காதலுக்காக நாமுமாய்த்தான்
இருக்கின்றோம்!
உனைத் தீண்டும்போதெல்லாம்
கன்னம் சிவக்கிறாயே!
நான் தொட்டுவிடக் கூடாதென்று
எச்சரிக்கைச் சின்னமா?
வியந்து கேட்டால்
இன்னும் சிவக்கிறாய்!
"ச்சீ போடா" என்கிறாய்!


Add Imageஅணைப்பின் சுகம்
அவ்வப்போது தருகிறாய்!
எப்போதும் கிடைக்குமா
என்றால்
"போடா மடையா"
என்று
பொய்க்கோபம் காட்டி
இன்னும் இறுக
அணைத்துக்கொள்கிறாய்!
கொள்கைப் பிடிப்பில்
உறுதியாய்த்தான் இருக்கிறாய்!

நேசம் என்றால்
என்னவென்று
நெஞ்சில் சாய்ந்து
கேள்வி கேட்கிறாய்?
அடி! மடப் பெண்ணே!
நீ என் மேல்
காட்டுவதன் பெயர்தானடி
நேசம்!
அருகில் இருக்கும்போதும்
இமைக்காமல் பார்க்கிறாய்!
தொலைவில் நகர்ந்துவிட்டால்
விழிகளால் தேடுகிறாயே!
இதுதானடி நேசம்!
இதற்குப் பெயர்தானடி
காதல்!


அப்படியும்
உனக்குப் புரியவில்லை
என்றுதானே
உருவம் கொடுத்து
விளக்கி இருக்கிறேன்!
இதோ உன் நேசம்!
இதோ நம் காதல்!
உன் மடியினில்
உறங்குதடி!
உருவம் இல்லாமல்
நம் இருவருக்குள்ளும்
இயங்கி வந்த
நம்மை இயக்கி வைத்த
அந்த
உன்னதமான காதல்!

18 comments:

  1. Last poem nice one --photo selection is also good
    Vimalavidya

    ReplyDelete
  2. ada ada ada..ennama feel panni koovi irukeenga anna...thaaru maaru...

    ReplyDelete
  3. //Last poem nice one --photo selection is also good
    Vimalavidya//

    மிக்க நன்றி Vimalavidya!

    ReplyDelete
  4. /ada ada ada..ennama feel panni koovi irukeenga anna...thaaru maaru//

    தேங்க்ஸ் எ லாட்!

    :)

    ReplyDelete
  5. //இதோ நம் காதல்!
    உன் மடியினில்
    உறங்குதடி//

    இரசிக்க வைக்கும் வரிகள் சிபி :-)

    ReplyDelete
  6. //இரசிக்க வைக்கும் வரிகள் சிபி :-)//

    மிக்க நன்றி புனிதா!

    ReplyDelete
  7. சூப்பர்...
    தல... என்னமா எழுதுது....!!!
    பிரமாதம் தல...
    //அருகில் இருக்கும்போதும்
    இமைக்காமல் பார்க்கிறாய்!
    தொலைவில் நகர்ந்துவிட்டால்
    விழிகளால் தேடுகிறாயே!
    இதுதானடி நேசம்!
    இதற்குப் பெயர்தானடி
    காதல்!//
    இந்த வரிகள்.. அருமை..அருமை..

    கடைசியா ஒரு டவுட்...

    இதெல்லாம் எங்க சுட்டது...?

    ReplyDelete
  8. //இதெல்லாம் எங்க சுட்டது...?//


    அடப் பாவி மாப்பி!
    எனக்கு இப்படியெல்லாம் எழுதவே வராதுன்னு முடிவு பண்ணிட்டியா?

    ReplyDelete
  9. //அடப் பாவி மாப்பி!
    எனக்கு இப்படியெல்லாம் எழுதவே வராதுன்னு முடிவு பண்ணிட்டியா?//
    உங்கள பத்தி எனக்கு மட்டும் தானே தெரியும்..
    ஹிஹி...

    ReplyDelete
  10. அன்பின் சிபி - நவீன் பிரகாஷ் கவிதை படித்த மாதிரி இரூக்கு - ரொம்ப நல்லாருக்கு - படமும் சரி - கவிதையும் சரி

    நேசத்தினை நிசமாக்கிக் காட்டிய சிபி வாழ்க - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. //உனைத் தீண்டும்போதெல்லாம்
    கன்னம் சிவக்கிறாயே!
    நான் தொட்டுவிடக் கூடாதென்று
    எச்சரிக்கைச் சின்னமா?
    வியந்து கேட்டால்
    இன்னும் சிவக்கிறாய்!
    "ச்சீ போடா" என்கிறாய்!//

    வெட்கம் தின்னும் வரிகள்.. மிகவும் அழகு...!! :)))

    ReplyDelete
  12. திவ்யா மிக்க நன்றி!

    ReplyDelete
  13. பாராட்டுக்கு நன்றி நவீன்பிரகாஷ்!

    ReplyDelete
  14. thalai kalakittel kaapi....

    nalla kavithai P.S I LOVE YOU thana antha photos???

    ReplyDelete
  15. Kavithail irukkum thamiz manam katchilum irunthal nara irunthirukkum

    Poovaragavan

    ReplyDelete
  16. super feelings........i really love it ...and a nice photos to...i love a lot..

    ReplyDelete